மட்டக்களப்பில் மூன்று சடலங்கள் மீட்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் சனிக்கிழமை (21) தூக்கில் தொங்கிய நிலையில் மூன்று சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஏறாவூர் பொலிஸ் பிரிவில் இரண்டு சடலங்களும் ஆயித்தியமலை பொலிஸ் பிரிவில் ஒரு சடலமும் மீட்கப்பட்டு உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

ஆயித்தியமலை நெடியமடு 6ம் கட்டையைச் சேர்ந்த ரவி சார்திகா (வயது 18) அவரது வீட்டிலிருந்து சனிக்கிழமை (21) சடலமாக மீட்கப்பட்டார். அரவது சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைக்காக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்க அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக ஆயித்தியமலைப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

தளவாய், புன்னைக்குடா வீதியைச் சேரந்த முத்தைய சிதம்பரம் (வயது 83) அப்பகுதியலுள்ள பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக சனிக்கிழமை (21) மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

குறித்த நபர் வெள்ளிகிழமை (20) முதல் காணமல் பேயிருந்தார் உறவினர்கள் தேடும் நடவடிக்கையில் ஈடுபட்டு சனிக்கிழமை தளவாய் பகுதியிலிருந்த பாழடைந்த வீடொன்றிலிருந்து சடலமாக மீட்கப்பட்டார்.

உயிரிழந்தவரது மகள் சிதம்பரம் கலைச்செல்வி சடலத்தை அடையாளம் காட்டினார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்வம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

ஆறுமுகத்தான் குடியிருப்பு துரைசாமி வீதியைச் சேர்ந்த மூன்று பெண் பிள்ளைகளில் தந்தையான நல்லதம்பி கனகசபை (வயது 68) அவரது வீட்டியில் சடலமாக சனிக்கிழமை (21) மீட்கப்பட்டதாக ஏறாவூர்ப் பொலிஸார் தெரிவித்தனர்.

அந்த பகுதியில் கோவில் சடங்களில் கலந்துகொண்டு அன்னதானம் கொடுப்பதற்காக வந்த குறித்த நபரது அண்ணன் மகள் பானு நவரெட்னம் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்படுவதைப்படுவதை அவதானித்து உறவினர்களிடம் அறிவித்துள்ளார்.

உயிரிழந்தவரது மகள் கனகசபை கிருசாந்தி சடலத்தை அடையாளம் காட்டினார். சடலம் உடற்கூற்றுப் பரிசோதனைகளுக்காக மட்டக்களப்பு போதனா வைத்திய சாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இச்சம்வம் தொடர்பாக ஏறாவூர்ப் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]