முகப்பு News Local News மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்பு

மட்டக்களப்பில் புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சில்லிக்கொடியாறு பகுதியிலேயே இவ்வாறு புதைக்கப்பட்டிருந்த நிலையில் ஒரு தொகை ஆயுதங்களை பொலிஸார் மீட்டுள்ளனர்.

இந்நிலையில், ரி56 ரக துப்பாக்கிகள் மூன்றும் அதற்குரிய மகசின்கள் ஐந்தும் ஒரு குழியில் பொலித்தீன் பைகளினால் சுற்றப்பட்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைக்க பெற்ற தகவலின் அடிப்படையில் சில்லிக்கொடியாறு பாலத்திற்கு அருகில் பொலிஸார் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

இதன்போதே துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதோடு, தொடர்ந்து அப்பகுதியில் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தரப்பு தெரிவித்துள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com