மட்டக்களப்பில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள மனித புதைகுழி- இரசாயன பகுப்பாய்வு செய்யுமாறு நீதிபதி உத்தரவு

மட்டக்களப்பு காவல்துறைப் பிரிவிலுள்ள சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் கிணறு அமைப்பதற்கு குழி தோண்டும் போது மீட்கப்பட்ட மனித மண்டை ஓடு மற்றும் எலும்புக் கூடுகளை இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதவான் காவல் துறையினருக்கு உத்தரவிட்டுள்ளார்.

சின்ன சவுக்கடி கடற்கரை பகுதியில் நேற்றுமுன்தினம் புதன்கிழமை கிணறு வெட்டுவதற்காக குழி தோண்டும் போது குழியில் இருந்து மனித மண்டை ஓடு ஒன்றும் எலும்புகளும் வெளிவந்துள்ள நிலையில் இது தொடர்பில் மட்டக்களப்பு காவல்துறையினருக்கு அறிவித்த நிலையில் நேற்று வியாழக்கிழமை சம்பவ இடத்திற்கு நேரடியாக சென்ற நீதவான் இந்த மனித மண்டை ஓடு மற்றும் எலும்புகளை இரசாயன பகுப்பாய்வுக்குட்படுத்துமாறு உத்தரவிட்டுள்ளார்.

மீட்கப்பட்ட மனித எலும்புகள் ஒருவருடையது எனவும் இவற்றை பொதிசெய்து கொழும்பிற்கு இரசாயன பகுப்பாய்வுக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ள மட்டக்களப்பு காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]