மட்டக்களப்பில் தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுப்பிடிப்பு!

மட்டக்களப்பில் இன்று விசேட அதிரடிப்படையினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் தாழங்குடா ஒல்லிக்குளம் முஸ்லிம் கிராமத்தில் அமைந்திருந்த தீவிரவாதிகளின் பயிற்சி முகாம் ஒன்று கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

இந்த முகாம் ஐ.எஸ். அமைப்பின் தற்கொலை தாரியான ரில்வானின் தலைமையில் இயங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த முகாமில் வைத்தே தீவிரவாதிகளுக்கு பயிற்சிகள் வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

குறித்த முகாமில் இருந்த அப்துல் ரகுப் என்பவரை கைது செய்து விசாரணைகளை  மேற்கொண்டுள்ளனர்.

இந்த முகாமில் இருந்தே தற்கொலை தாக்குதலுக்கு பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் எஸ்லோன் குழாய் மீட்கப்பட்டுள்ளது.

குழாயில் தயாரிக்கப்பட்ட வெடிபொருள் அண்மையில் கட்டுநாயக்க விமான நிலைய வீதியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது எனவே அந்த வெடிகுண்டு இங்கு தயாரிக்கப்பட்டதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – inf[email protected]