மட்டக்களப்பில் சர்வதேச திரைப்பட விழா

மட்டக்களப்பில் சிறகுநுனி கலை, ஊடக மையத்தின் ஏற்பாட்டில் சர்வதேச திரைப்பட விழா எதிர்வரும் டிசம்பர் 14, 15, 16ம் திகதிகளில் மட்டக்களப்பு கல்லடி சாந்தி திரையரங்கில் சிறகுநுனி சர்வதேச திரைப்பட விழா 2018 நடைபெறவுள்ளது.

டிசம்பர் 14 வெள்ளிக்கிழமை மாலை 5.00 மணிக்கு ஆரம்ப நிகழ்வும் அதைத் தொடா்ந்து 6.00 மணிக்கு சிறப்புத் திரைப்படக் காட்சியும் இடம்பெறவுள்ளது.

இலங்கை, பங்களாதேஷ், ஈரான், போன்ற ஆசிய நாடுகளுடன் ஐரோப்பிய நாடுகளும் கலந்து கொள்ளும் இத்திரைப்பட விழாவில் 9 முழு நீளத் திரைப்படங்களும் குறுந்திரைப்படங்களும் இலவசமாக காண்பிக்கப்படவுள்ளன.

திரைப்படங்கள் அனைத்தும் ஆங்கிலத்தில் உப தலைப்பிடப்பட்டுள்ளன. இலங்கைத் திரைப்படங்களின் உரையாடல்கள் தமிழிலும் சிங்களத்திலுமாக அமைந்துள்ளன. உலக சினிமாவின் கவனத்தை ஈர்த்த இலங்கையின் அண்மைக்கால திரைப்படங்களுடன் அவற்றின் இயக்குனர்களும் திரையிடல்களின் போது பங்கேற்கவுள்ளனர்.

திரைப்படங்களின் நிறைவில் அவர்களுடனான குறுகிய நேர கருத்துப் பகிர்வுகள் இடம்பெறும்.

மேலதிக விபரங்களுக்கு fb/ Sirahununi, 077 8317686, [email protected]

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]