மட்டக்களப்பில் குடும்ப வன்முறை காரணமாக பரிதாபமாக உயிரிழந்த குழந்தை

மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பிரதேசத்தில் மனைவி மீது குறட்டால் தாக்க முற்பட்டபோது அது தவறி மனைவியின் கையில் இருந்த ஒன்றரை வயது பெண் குழந்தை மீது தாக்கியதில் குழந்தை படுகாயமடைந்த நிலையில் ) மட்டு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் நேற்று திங்கட்கிழமை (08) உயிரிழந்துள்ளார் இதனையடுத்து தந்தையை கைது செய்துள்ளதாக கொக்கட்டிச்சோலை பொலிசார் தெரிவித்தனர்.

கடுக்காய்முனை அருள்நேசபுரம் சேர்ந்த திலீபன் யதுநிசா என்ற ஒன்றரை வயது பெண் குழந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளது

இதுபற்றி தெரிய வருவதாவது

குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 30 வயதுடைய பெரியதம்பி திலீபன் சம்பவதினமான கடந்த 4ம் திகதி மாலை மனைவியுடன் ஏற்பட்ட சண்டையையடுத்து வீட்டில் இருந்த குறடு ஒன்றை கையில் எடுத்துக் கொண்டு மனைவியை தாக்க முற்பட்டபோது மனைவி திடீரென கையில் குழந்தையை துக்கியபோது குறடு குழந்தையின் தலையில் தாக்கப்பட்டதையடுத்து குழந்தை படுகாய மடைந்ததையடுத்து தந்தை தப்பி ஓடிவிட்டார்.

இதனையடுத்து குழந்தையை மட்டு போதனா வைத்திய சாலை அதிதீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டது சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பயனளிக்காத நிலையில் நேற்று திங்கட்கிழமை (08) பகல் குழந்தை உயிரிழந்துள்ளது.

இதேவேளை தலைமறைவாகிய தந்தையை பொலிசார் நேற்று திங்கட்கிழமை (08) கைது செய்துள்ளதுடன் அவரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர்

இது தொடர்பான மேலதிக விசாரணையை கொக்கட்டிச் சோலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]