மட்டக்களப்பில் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலை!!

மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 39ஆம் கிராமத்தில் நேற்று இனந்தெரியாதவர்களினால் குடும்பஸ்த்தர் ஒருவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.

நேற்று இரவு 39ஆம் கிராமத்தில் வயல்வெளி ஊடாக வந்துகொண்டிருந்தவரை வழிமறித்த சிலர் சரமாரியாக வெட்டியுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

படுகாயமடைந்த 39ஆம் கிராமத்தினை சேர்ந்த 49 வயதான கமலேஸ்வரன் என்பவர் களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கிருந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு கொண்டு சென்ற போது உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் மேலதிக விசாரணைகளை வெல்லாவெளி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]