மட்டக்களப்பில் காதலர்களின் சொர்க்கபுரிகள் எவை எவை?

இலங்கையை பொருத்தவரையில் சுற்றுலா தளத்ததிற்க்கு சிறந்த நாடுகளின் பட்டியலில் மிக முக்கியமான இடத்தில் காணப்படுகின்றது.

இன்றைய திகதியில் மட்டக்களப்பில் காதலர்களின் சொர்க்கபுரிகள் எவை எவை? இந்தக் கேள்வியுடன் புறப்பட்டோம். இள வட்டங்கள் எங்கெல்லாம் முகாமிடுகிறார்கள், ஏன் அந்த இடங்களை தேர்ந்தெடுக்கிறார்கள், ஏன் அவை சொர்க்கபுரியாக மாறின என்பதை இதில் பட்டியலிட்டுள்ளோம்.

மட்டக்களப்பின் நான்கில் மூன்று பங்கு நீராலானது. இதுதான் பல சுற்றுலா மையங்கள் உருவாக காரணம். முன்னரும் சுற்றுலா தலங்களும், காதல் மையங்களும் இருந்தாலும், இன்று அவை பல்கிப்பெருகிவிட்டன. வாழ்க்கைமுறையிலும் நிறைய மாற்றங்கள் வந்து விட்டன.

இதயம் பட முரளி மாதிரி எட்டி நின்று காதலித்த காலம் இப்போதில்லை. பழகிப்பார்ப்போம், பிடித்திருந்தால் மேற்கொண்டு யோசிக்கலாம் வகைதான் இப்பொழுது. முன்னர் மாதிரி தூரத்தில் நின்று கொண்டு கடிதம் எழுதும் காலம்போய், கையை படித்துக் கொண்டு பீச், ஹோட்டல் என இளசுகள் பகிரங்கமாக காதல் செய்கிறார்கள். போனில், இன்ரநெற்றில் கடலை போடுவதெல்லாம் ஒரு அளவுக்குத்தான். நேரிலும் கடலை போட வேண்டும். அதனால் எல்லா இடங்களிலும் காதல் மையங்கள் உருவாகி விட்டன.

இயற்கையாகவே எழில் நிறைந்தது மட்டக்களப்பு. காதலர்களாலும் கலர்புல்லாகும் பொழுது போக்கு மையங்கள் எவை? ஏன் இந்த இடங்களை காதலர்கள் விரும்புகிறார்கள் என்பது பற்றிய விபரம்.

Kallady Beach

மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பு எப்பொழுதும் காதலர்களிற்கும் சொர்க்கபுரிதான். மண்ணில் எழில் காதலையும் மெருகேற்றியுள்ளது. காலம்காலமாக மட்டக்களப்பில் காதல் திருத்தலங்கள் பல இருந்துள்ளன. காதலர்கள் கூடியிருந்து கதைத்து, பொழுதை போக்கும் அந்த இடங்கள் காலத்திற்கு காலம் மாற்றம்பெற்றும் வருகின்றன. காதல் முறை மாற, காதல் தலங்களும் மாறுகின்றன…

சென்னை மெரினா பீச் பற்றி அறிந்திருப்பீர்கள். மட்டக்களப்பின் மெரினாவும் பிரசித்தமானதுதான். ஆம். கல்லடி கடற்கரைதான் மட்டக்களப்பின் காதலர் திருத்தலமாக உள்ளது. குடும்பமாக, நண்பர்களாக பெருமளவானவர்கள் அங்கு வருவதை போல காதலர்களும் வருகிறார்கள்.

Batticaloa Fort

Batticaloa கோட்டை) போர்த்துகீசியர்களால் 1628 ஆம் ஆண்டு கட்டப்பட்டது மற்றும் 18 மே 1638 இல் டச்சுரால் கைப்பற்றப்பட்டது.  பின்னர், கோட்டை பிரிட்டிஷாரால் 1745 முதல் பயன்படுத்தப்பட்டது.

இந்த கோட்டைக்கு நான்கு கோட்டைகளின் கட்டமைப்பு உள்ளது, மேலும் இரு பக்கங்களிலும் மட்டக்களப்பு லகூனால் பாதுகாக்கப்படுகிறது, மேலும் இரு பக்கங்களிலும் ஒரு கால்வாய் உள்ளது. இந்த கோட்டை நியாயமான நிலையில் உள்ளதுடன், பழைய கட்டடத்திற்குள் அமைந்துள்ள புதிய கட்டிடங்களில் தற்போது இலங்கை அரசாங்கத்தின் பல உள்ளூர் நிர்வாக திணைக்களங்களும் அமைந்துள்ளன.

Batticaloa Lighthouse

கொஞ்சம் பணம் இருந்து, துணிச்சலும் இருக்கும் காதலர்கள்தான் இங்கு அதிகமாக வருகிறார்கள். வீடுகளில் உத்தியோகபூர்வ அனுமதி பெற்ற காதலர்களும் சற்று ஆறுதலாக பொழுதை போக்கலாமென இங்கு வருகிறார்கள். நீண்டநேரம் பொழுது போக்க உகந்த இடம்.

சிறிய அழகிய தீவொன்று அங்குள்ளது. அங்கு அழகிய பூங்காவொன்றும் உள்ளது. படகுச்சவாரி உள்ளது. காதலர்கள் தவிர்த்து, சுற்றுலா பயணிகள் மற்றும் குடும்பத்தினர் என பெருமளவானவர்கள் கூடுமிடம். அதனால் துணிச்சல் குறைந்த காதலர்கள் அங்கு செல்வதில்லை!

இரண்டு பேர் பேசணும்… நாள் முழுக்க பேசணும்… யாரும் தொந்தரவில்லாமல் பேசணும்…. பணம் செலவிட்டு றூம் போடாமலும் பேசணும் என்றால் இந்த இடத்தை நிச்சயப்படுத்திக் கொள்ளலாம்.

Kallady Bridge

இந்த பாலம் 1924 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் காலனித்துவ ஆட்சி காலத்தில் கட்டப்பட்டது.  பிரித்தானிய பிரிட்டிஷ் கவர்னரான வில்லியம் மானிங்கின் மனைவியின் நினைவாக இந்த பாலம் லேடி மானிங் பிரிட்ஜ் என பெயரிடப்பட்டது.  இது இலங்கையின் பழமையான மற்றும் மிக நீண்ட இரும்பு பாலம் ஆகும்.

சராசரியாக 10,000 வாகனங்கள் தினமும் குறுகிய, ஒற்றைப் பாதை பாலத்தை கடந்தது.  பாலம் மீது விபத்துகள் பகுதியில் போக்குவரத்து சிக்கல்களை ஏற்படுத்தும்.

St. Mary’s Cathedral

புளியந்தீவில் உள்ள மட்டக்களப்பில் உள்ள ரோமன் கத்தோலிக்க மறைமாவட்டத்தின் கதீட்ரல் தேவாலயம் ஆகும். மட்டக்களப்பு மாவட்டத்தில் அமைந்துள்ள கதீட்ரல் என்பது ஒரு மைல்கல் மற்றும் கத்தோலிக்க வரலாற்று அடையாளமாகும். இது முதலில் 1808 ல் பசல் முடலியாரால் கட்டப்பட்டது.

திருகோணமலை – மட்டக்களப்பு மறைமாவட்டத்தின் கீழ் இணை தேவாலயம் மற்றும் 2012 இல் மட்டக்களப்பு மறைமாவட்டத்தை உருவாக்கிய பின்னர் கதீட்ரல் ஆனது

Batticaloa Museum

மட்டக்களப்பு மட்டக்களப்பு கோட்டையின் உள்ளே அமைந்துள்ள ஒரு சிறிய அருங்காட்சியகம் மட்டக்களப்பு அருங்காட்சியகம் ஆகும். இது 1999 இல் நிறுவப்பட்டது.

அருங்காட்சியகம் பாம்-இலை கையெழுத்துப் பிரதிகள், பிரிட்டிஷ் சகாப்த அரசாங்க பொருட்கள், கருவிகள் மற்றும் பாத்திரங்கள் போன்ற அரிய பொருள்களைக் கொண்டுள்ளது.

Batticaloa Clock Tower

இருதயபுரம் மணிகூட்டு கோபுரம் 1998ஆம் ஆண்டு பாராளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தினால் அடிக்கல் நடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Batticaloa Gate

இதுவும் அண்மையில் அமைக்கப்பட்ட பூங்காதான். ஆனால் காந்திப்பூங்காவை விட காதலர்களிற்கு சற்று பொறுத்தமானது. அதனால் நகரத்திற்குள் நேரத்தை செலவிட விரும்பும் காதலர்கள், நகரப்பகுதிக்குள் வாழ்பவர்கள் இங்குதான் காதல் சிறகை விரிக்கிறார்கள்.

காந்தி பூங்காவில் நடு வெயிலில் போனால் காதல் செய்ய முடியாது. கருவாடுதான் போட முடியும். அந்தக்குறை இங்கு கிடையாது. பழைய கோட்டைப்பகுதியில் அமைந்துள்ளது. கச்சேரி போன்ற நெருக்கடியான இடங்கள் அருகிலிருந்தாலும், வாவியோரமாக அமைந்துள்ள இதன் அமைவிடம் ஒரு தனிமைத்தோற்றத்தை ஏற்படுத்தி விடுகிறது. அதனால் காதலர்கள் தாராளமாக இங்கு கூடுகிறார்கள்.

பகலில் சற்று நேரம் கிடைக்கிறது, ஆறுதலாக உட்கார்ந்து கடலை போடலாமென நகரத்திலுள்ள யாராவது காதலர்கள் நினைத்தால் இந்த இடம் பொருத்தமானது.

Batticaloa Market

மட்டக்களப்பு மாவட்டத்தைப் சந்தைகள் அதிகமாக பொருத்தவரையில் பொதுசந்தைகள் அதிகமாக காணப்பட்டாலும், ஞாயிற்று தினங்களில் கூடும் சந்தைகள் மிகவும் பிரபல்யமானது.

மருந்துகள் அற்ற மிகவும் ஆரோக்கியமான காய்கறிகள் , பழங்கள் விற்க்கப்படுகின்றன.

Batticaloa Lagoon

மட்டக்களப்பில்

மட்டக்களப்புப் பிரதேசத்தை ஊடறுத்து வடக்குத் தெற்காக அமைந்துள்ளது. சுமார் 30 மைல் நீளமான இவ்வாவி ஏறத்தாழ 27/527 ஏக்கர் பரப்பினைக் கொண்டது. இலங்கையின் மிகப் பெரிய வாவி என்று கருதப்படுகிறது. தெற்கு மேற்காகக் கடலுடன் கலக்கும் இவ்வாவி கடலிலிருந்து ஏறக்குறைய இருபது மைல் நீளம் வரை உவர்நீரையும் ஏனைய பகுதிகளில் நன்னீரையும் கொண்டுள்ளது.

உப்புநீர்ப் பகுதியில் மீன்பிடித்தலும் நன்னீரைப் பயன்படுத்தி வேளாண்மையும் நடைபெறுவதால் இப்பகுதி மக்களின் வாழ்க்கைத் தேவைக்கு இன்றியமையாததாக உள்ளது. மட்டக்களப்பு வாவியின் கிழக்குப் பகுதிகள் சூரியன் எழுவதால் எழுவான்கரை என்றும் மேற்குப் பகுதியில் சூரியன் படுவதால் (மறைவதால்) படுவான்கரை என்றும் அழைக்கப்படுகின்றன.

Batticaloa Ganthi Park

மகாத்மா காந்தி பூங்கா அல்லது பொதுவாக ‘காந்தி பூங்கா’ என்று அழைக்கப்படும் மட்டக்களப்பு நகரத்தின் மையப்பகுதியில் சமீபத்தில் மட்டக்களப்பு குகை ஒன்றில் கட்டப்பட்டது. உள்ளூர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் மிகவும் விஜயம் செய்யும் இடமாக இந்த பூங்கா விளங்குகிறது.

மட்டக்களப்பு நகர மத்தியில் அண்மையில் அமைக்கப்பட்ட பூங்கா. காலை, மாலைகளில்த்தான் உட்காரலாம். சற்று வெயில் ஏறினால் கருவாடுதான் போடலாம். காதலர்களின் முன்னணி விருப்பத் தேர்வாக இது இருப்பதாக கொள்ள முடியாது. காரணம், நகர மத்தி மற்றும் சன நெரிசல். ஆனால் இடையிடையே ஓரளவு காதலர்கள் வருகிறார்கள். குறிப்பாக மட்டக்களப்பிலுள்ள உயர்கல்வி நிறுவனங்களில் கல்விகற்கும் வெளியிட மாணவர்கள்தான் துணிச்சலாக இங்கு காதல் செய்கிறார்கள்.

Batticaloa Ground Nuts

மட்டக்களப்பில்

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]