மட்டக்களப்பில் இளம் தாயின் சடலம் வீட்டிலிருந்து மீட்பு…

மட்டக்களப்பு ஏறாவூர் பொலிஸ் பிரிவின் மாவடிவெம்பு கிராமத்திலுள்ள வீடொன்றிலிருந்து 19 வயதான இளம் தாயொருவரின் சடலத்தை ஞாயி;ற்றுக்கிழமை 10.03.2019 தாம் மீட்டெடுத்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.

மூன்று வயதுக் குழந்தைக்குத் தாயான, மாவடிவேம்பு -02, மணிவாசகர் வீதியை அண்டி வசித்து வந்த சிவானந்தம் ஜானு என்ற இளம் தாயின் சடலமே பொலிஸாரால் மீட்கப்பட்டது.

வீட்டில் இளம் தாயொருவரின் சடலம் இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து ஸ்தலத்திற்குச் சென்ற பொலிஸாரும் தடயவியல் பொலிஸ் குழுவினரும் சடலத்தை மீட்டு உடற்கூறாய்வுப் பரிசோதனைக்காக செங்கலடி பிரதேச வைத்தியசாலையில் ஒப்படைத்தனர்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]