மட்டக்களப்பில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு

பௌதீக உலகத்தில் பகவான் கிருஷ்ணர் அவதரித்த தினத்தினை விமர்சியாக கொண்டாட விருக்கிறோம். இந்த முக்கியமான நிகழ்ச்சியில் அனைவரும் கலந்து கொண்டு மகிழ்ச்சி பெற வேண்டும் என அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் மட்டக்களப்புகிளை முகாமையாளர் ஸ்ரீராம் சரணாராவிந்த தாஸ் தெரிவித்தார்.

மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரியில் எதிர்வரும் 02ஆம் திகதி நடைபெறவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு தொடர்பில் அறிவிக்கும் வகையில் நடைபெற்ற ஊடக சந்திப்பில் கருத்துத்தெரிவிக்கும் போதே அவர்இவ்வாறு தெரிவித்தார்.
இவ் ஊடகசந்திப்பில் இத்தாலிக்கு அருகிலுள்ள சொவானியா நாட்டிலிருந்து வருகை தந்திருக்கும்லோமன் சீத்தா தாஸ{ம்இணைந்திருந்தார்.

தொடரட்ந்து கருத்துத் தெரிவித்த ஸ்ரீராம் சரணாராவிந்த தாஸ்,

அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கமானது உலகளாவிய அனைத்து அமெரிக்கா, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை மற்றும் நாடுகளிலும் மக்களுக்கு பகவத் கீதைசம்பந்தமான விழிப்புணர்வுகள், வாழ்க்கையினுடைய குறிக்கோள்கள், நாம்யார்,கடவுள்யார் நமக்கும்கடவுளுக்கும்உள்ள தொடர்பு என்ன இவ்வாறான பல விடயங்களையும் எல்லோருக்கும்எடுத்துச் சொல்லிக் கொண்டிருக்கிறது.

இலங்கையில் கடந்த 30வருடங்களாக எல்லா மக்களுக்கும் எந்த விதமான பாகுபாடும்இன்றி பகவத் கீதை உண்மை உருவில்சார்பாக வாழ்க்கை பற்றிஎடுத்துச் சொல்லிவருகிறது. மட்டக்களப்பில் 5 வருடங்களாக போருக்குப்பின்னர் எமது இயக்கத்தின் சார்பாக செவ்வனேஇயக்கிக் கொண்டிருக்கிறோம்.

ஒவ்வொரு ஊரிலும் பகவான் கிருஷ்ணருடைய பிறந்த தினம் மிகச்சிறப்பாக வருகிற செப்ரம்பர் 2ஆம் திகதி கொண்டாடப்படும். மெல்பேர்ண், நியூடெல்லி, நியூயோர்க், கொழும்பு, என 600க்கும் மேற்பட்ட இடங்களில் இந்தப் பௌதீக உலகத்தில் பகவான் கிருஷ்ணர்அவதரித்த தினத்தினை விமர்சியாக கொண்டாட விருக்கிறோம்.
உலகின் பல நாடுகளிலும்இருந்து கிருஷ்ண பக்தர்கள் வருகை தந்திருக்கிறார்கள். கடந்த 3வருடங்களாக ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு மட்டக்களப்பில் நடத்தி வருகிறோம். இது ஒரு சிறப்பானதொரு நிகழ்வு இவ் வருட நிகழ்வு மாலை 4.30 மணிக்கு பஜனையுடன் ஆரம்பமாகி பரத நாட்டியம், கிருஷ்ண கதா, உலக நாடுகளில் நடைபெறும் ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வு காட்சிகள், பூஜை ஆராத்தியுடன் பிரசாதமும் வழங்கப்படவுள்ளது.

செப்ரம்பர் 02ஆம்திகதி மாலை 4.30 முதல் நடைபெறவுள்ள ஸ்ரீ கிருஷ்ண ஜென்மாஷ்டமி நிகழ்வில் பங்கு கொண்டு பகவானின் அருளையும் அன்பையும் பெற்றுக்கொள்ளுங்கள் என்றும் அழைப்பவிடுத்தார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]