யார் தயான் ஜயதிலக்க? தேசப்பற்றாலராகக் காட்டிக்கொள்ளும் ஒரு சிங்களப் புலி : மங்கள ஆவேசம்

சதயான் ஜயதிலக்க ஒரு சிங்கள புலி. ஆயுதப் போராட்டம் அரங்கேறிய காலத்தில் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணியிடமே ஆயுதப் பயிற்சி பெற்றார் என்று வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்று காரசாரமான ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார்.

மங்கள சமரவீர

வெளிவிவகார அமைச்சில் இன்று பிற்பகல் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

இலங்கைக்குள் வெளிநாட்டு நீதிபதிகளை அனுமதிப்பதற்கு அரசமைப்பில் இடமில்லை . எனினும், உலகம் ஏற்கும் வகையில் உள்ளகப் பொறிமுறை செயற்படும். தேசப்பற்றாளர்களாக அடையாளப்படுத்திக்கொண்டுள்ள சிலர் பற்றிய விவரத்தை வெளியிடவேண்டும். அதில் ஒருவர்தான் தயான் ஜயதிலக்க. தேசப்பற்றாளராக காட்டிக்கொள்ளும் இவர் ஒரு சிங்களப் புலியாகும். இவர் தனது அரசியல் பயணத்தை எங்கே ஆரம்பித்திருந்தார்.

மங்கள சமரவீர

ஜே.வி.பி.யின் இளைஞர்களை கொலைசெய்யும் குழுவிலும் சிறிதுகாலம் இவர் இருந்துள்ளார். அதன்பின்னர் அரச விரோதச்செயல்களில் ஈடுபட்டார். கைதுசெய்யும் நிலைவந்தபோது தலைமறைவானார். 3 வருடங்கள் ஒளிந்திருந்துவிட்டு பிரேமதாசவுடன் இணைந்துகொண்டார். குறித்த காலப்பகுதியில் ஈ.பி.டி.பியிடம் ஆயுதப்பயிற்சிபெற்றுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]