முஸ்லிம்கள் மக்கா செல்ல தடை!

கட்டார் நாட்டு பிரஜைகள் மக்காவிற்கு சென்று வழிபாடுகளில் ஈடுபட தடைவிதிக்கப்பட்டுள்ளதாக கட்டாரின் உள்ளுர் ஊடகம் ஒன்றை மேற்கோள் காட்டி சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

இந்த தடையின் காரணமாக கட்டார் நாட்டவர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதாக அந்த நாட்டு மனித உரிமை ஆணைக்குழுவில் நூற்றுக்கணக்கான முறைப்பாடுகள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த தடைக்கு சர்வதேசத்தின் பல நாடுகளை சேர்ந்த மனித உரிமை அமைப்புக்கள் தமது கண்டனத்தை வெளியிட்டுள்ளன.

அத்துடன் கட்டாருக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பிரச்சாரம் செய்கின்ற பிரஜைகளுக்கு எதிராக கடுமையான சட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு பஹ்ரேய்ன் மற்றும் ஐக்கிய அரவு இராச்சியம் என்பன தீர்மானித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, வளைகுடை நாடுகளுடனான தொடர்பு துண்டிக்கப்பட்ட நிலையில், ஈரான் 5 வானூர்திகள் மூலம் கட்டாருக்கு உணவுப்பொருட்களை இன்று அனுப்பியுள்ளது.

ஏனைய வளைகுடா நாடுகளுக்கும் கட்டாருடனுமான வானூர்தி சேவைகள் நிறுத்தப்பட்ட நிலையில், இந்த உணவுப்பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஈரானிய பேச்சாளர் ஒருவர் தெரிவித்தார்.