ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் JVP மற்றும் UNP செயற்பாட்டாளர்கள் இணைந்துகொண்டனர்

JVP மற்றும் UNPமக்கள் விடுதலை முன்னணியின் கண்டி மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் திமுது அபேகோன் உள்ளிட்ட கண்டி மாநகர சபை மக்கள் விடுதலை முன்னணி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் உறுப்பினர்கள் சிலர் இன்று (15) ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவை சந்தித்து ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்துகொண்டனர்.

கண்டியில் உள்ள ஜனாதிபதி மாளிகையில் இச்சந்திப்பு இடம்பெற்றது. ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன நாட்டுக்காக முன்னெடுத்திருக்கும் நிகழ்ச்சித்திட்டங்களுக்கு தமது முழுமையான ஆதரவை வழங்குவதாக அவர்கள் தெரிவித்தனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]