முகப்பு News Local News மக்கள் முறைப்பாடுகள் செய்வதில்லை – காவல்துறையினர்

மக்கள் முறைப்பாடுகள் செய்வதில்லை – காவல்துறையினர்

யாழ்ப்பாணத்தில் இடம்பெறுவதாக கூறப்படும் சில சம்பவங்கள் தொடர்பில் மக்கள் முறைப்பாடுகள் செய்வதில்லையென காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரனுக்கும் காவல்துறையினர் உயரதிகாரிகளுக்கும் இடையில் இடம்பெற்ற சந்திப்பொன்றில் காவல்துறையினர் இந்த விடயத்தை குறிப்பிட்டதாக வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

காவல்துறையினருடனான சந்திப்பு குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

வன்முறைகள் தொடர்பில் முறையிடுவதற்கு விசேட தொலைபேசி இலக்கம் ஒன்று காவல்துறையினரால் அறிமுகம் செய்யப்பட்டுள்ளமை தொடர்பிலும் இதன்போது கலந்துரையாடல்கள் இடம்பெற்றுள்ளன

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – info@universaltamil.com