மக்கள் பாதுகாப்புக்காக ‘புறக்கோட்டை’யில் விசேட வேலைத்திட்டம்

மக்கள் பாதுகாப்புக்காக ‘புறக்கோட்டை’யில் விசேட வேலைத்திட்டம்

பண்டிகைக் காலத்தில் பொருட்களைக் கொள்வனவு செய்வதற்காக கொழும்பு புறக்கோட்டை செல்லும் மக்களின் பாதுகாப்புக் கருதி விசேட வேலைத்திட்டம் இன்று முதல் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கான நடவடிக்கையை பொலிஸ் தலைமையகம் முன்னெடுத்துள்ளதுடன், அதிகளவான பொலிஸார் பாதுகாப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

திருடர்களிடம் இருந்து மக்களைப் பாதுகாப்பதை நோக்காக கொண்டு இந்த திட்டம் முன்னெடுக்கபட்ட்டுள்ளது.

சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியின் கண்காணிப்பின் கீழ் இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]