மக்கள் பணத்தை களவாட சூரையாட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் – மைத்திரிபால சிறிசேன

மைத்திரிபால சிறிசேன

இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நூற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள். ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சி ஊடாக நாடு முழுவதிலும் தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் மக்கள் பணத்தை களவாட சூரையாட ஒருபோதும் இடமளிக்க மாட்டேன் இவ்வாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

மட்டக்களப்பு மாவடிவேம்பில் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை நடைபெற்ற ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தேர்தல் பிரசார கூட்டத்தில் உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்து உரையாற்றுகையில் – எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் மட்டக்களப்பு மக்கள் மக்களுக்காக நல்ல சேவை செய்யக்கூடிய நல்ல பிரதிநதிகளை தெரிவு செய்ய வேண்டும். தெரிவு செய்யப்படும் பிரதிநிதிகள் தவறாக வேலை செய்ய இடமளிக்க முடியாது.

ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியில் நாடுபூராகவும் உள்ளுராட்சி மன்றங்களுக்குத் தெரிவு செய்யப்படும் உறுப்பினர்களுக்கு நல்ல பயிற்சி வழங்கி நல்லவர்களாக சேவை செய்வதற்கு உதவுவேன். சமூகத்தில் வேலை செய்யும் போது மக்களிடையே அன்பு செலுத்த வேண்டும்.

இந்த நாட்டில் நல்ல படித்தவர்கள், வைத்தியர்கள், பொறியலாளர்கள், பல்கலைக்கழகங்களில் விரிவுரையாளர்கள், விஞ்ஞானிகள், குறைவில்லாத வளங்கள் வசதிகள் வாய்ப்புகள் இருந்தும் ஏன் இந்த நாடு முன்னேறவில்லை என மக்கள் எங்களைப் பார்த்து கேள்வி கேட்கின்றார்கள்.

இந்த நாட்டில் அரசியல் செய்ய வருகின்றவர்களில் நுற்றுக்கு ஐம்பது சதவீதமானவர்கள் மக்களின் பணத்தை களவாடுகின்றார்கள்.

2008 முதல் 2016 வரை மத்திய வங்கி ஊழல் மோசடியில் ஆயிரக்க கணக்கான கோடிப் பணங்களை கையாடல் செய்துள்ளார்கள். வேலை செய்யும் ஏழை மக்களின் ஊழியர் சேமலாபநிதி, வங்கிகளில் உள்ள வைப்பு, பல்லைக்கழக மாணவர்களின் மகாபொல புலமைப்பரிசில், வாழ்கை வாகனக் காப்புறுதிப் பணம் என்பவற்றை கையாடல் செய்துள்ளார்கள்.

கள்ளர்களைப் பிடிப்பதற்காக இலங்கை மத்திய வங்கி கணக்குகளை ஆராய்வதற்காக ஒரு ஆணைக்குழு, அரசியல்வாதிகள் பல மேசடிகளைச் செய்து சம்பாதித்த பணம் பற்றி அறிவதற்கான ஜனதிபதி ஆணைக்குழு என இரண்டு ஆணைக்குழுக்களை கடந்த வருடம் நியமித்தேன்.

இந்த ஆணைக்குக்குழுவின் அறிக்கையின் பிரகாரம் குற்றவாளிகள் என கூறப்பட்டிருக்கும் அனைவருக்கும் எதிராகவும் நாங்கள் வழக்குத் தாக்ல் செய்வோம். எந்த கட்சியைச் சார்தவர்களானாலும் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கமாட்டோம்.

இலவச மருத்துவம், இலவச கல்வி, வீதிகள் குளங்கள் புனரமைப்பதற்காக தொழில் வாயப்புக்களை ஏற்படுத்துவதற்காக பணத்தை கையாடல் செய்துள்ளார்கள் இந்த கள்வர்களுக்கு நீங்கள் மன்னிப்பு வழங்க வேண்டாம் நானும் மன்னிப்பு வழங்கவே மாட்டேன்.

இந்த நாட்டிலே சுத்தமான அரசியல் கலாசாரத்தை உருவாக்க மக்களுக்கு அழைப்புவிடுக்கிறேன். என்றார்.

மைத்திரிபால சிறிசேன மைத்திரிபால சிறிசேன மைத்திரிபால சிறிசேன மைத்திரிபால சிறிசேன மைத்திரிபால சிறிசேன

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]