மக்களை முட்டாளாக்கி பல்டி அடித்த மைத்திரி- அடுத்து நடக்கப்போவது என்ன??

கடந்த 2015 ஜனாதிபதி தேர்தலின் போது மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கும் வகையில் ஐக்கிய தேசிய முன்னணி தலைமையில் கட்சிகளின் கூட்டணி ஒன்று உருவானது.

சுதந்திர கட்சியில் அங்கம் வகிக்கும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா உட்பட பல பேரின் முயற்சியில் பொது வேட்பாளாராக மஹிந்த ராஜபக்சவின் நண்பராக இருந்த மைத்திரிபால சிறிசேன களமிறக்கப்பட்டார்.

இந்த காலகட்டத்தில் மைத்திரிபால சிறிசேன ஒரு கதாநாயகனாக நோக்கப்பட்ட்டாலும் மஹிந்த தரப்பை பொறுத்த வரை அவர் ஒரு துரோகியாகவே கருதப்பட்டார்.

முதல் நாள் இரவு மஹிந்த ராஜபக்சவுடன் ஆப்பம் உண்டு விட்டு அடுத்த நாள் காலை அவருக்கே துரோகம் செய்த மைத்திரி என பலராலும் அவர் ஏளனம் செய்யப்பட்டார்.

அதே வேளை அந்த கால கட்டத்தில் மிகவும் கடுமையாக செயற்பட்ட மஹிந்த ராஜபக்ச மூலம் மைத்திரிக்கு உயிராபத்து உள்ளது எனவும் பல தகவல்கள் வெளியாகி இருந்தது.

இந்த விடயத்தை மைத்திரிபால சிறிசேன பல தேர்தல் பிரச்சார மேடைகளில் கூறிவந்தார்.

“நான் இந்த தேர்தலில் தோல்வி அடைந்தால் நானும் எனது குடும்பமும் ராஜபக்ச குடும்பத்தால் ஆறடி நிலத்தில் புதைக்கப்படுவோம்” என மைத்திரி கூறி வந்துள்ளார்.

ஆனால் தற்போது கடந்த ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதி முதல் மீண்டும் மஹிந்த தரப்புடன் நட்புறவாகியுள்ள மைத்திரி இந்த விடயத்தை தலைகீழாக புரட்டி போட்டுள்ளார்.

ராஜபக்ச குடும்பம் தன்னையும் தனது குடும்பத்தையும் கொலை செய்யும் என்பதற்கு எந்தவித ஆதாரபூர்வ கருத்தும் வெளியாகி இருக்கவில்லை. ஆனால் தேர்தல் மேடையில் பிரச்சார நோக்கத்தில் பொய் குற்றச்சாட்டு கூறினேன் என பல்டி அடித்துள்ளார்.

இதில் எந்தளவு உண்மை பொய் இருக்கிறது என்பதை விட தேர்தல் மேடையில் மக்களை முட்டாள்கள் ஆக்கிய மைத்திரிக்கு இனிமேல் மக்கள் கூறப்போகும் பதில் என்ன?

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]