மக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது: பந்துல குணவர்தன

மக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தம் அறிவிக்கப்பட்டுள்ளது: பந்துல குணவர்தன

மக்களை ஏமாற்றவே வாகன இறக்குமதி இடைநிறுத்தத்தை அரசாங்கம் அறிவித்துள்ளது என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

புஞ்சி பொரளையில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘ரூபாயின் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டு கடன் தொகை அதிகரித்துள்ளதாக அரசாங்கம் குறிப்பிட்டுள்ளது. ஆனால் ரூபாய் வீழ்ச்சியடைந்துள்ளதால் நாட்டின் கடன் தொகை ஒருபோதும் உயர்வடையாது என மத்திய வங்கி ஆளுநர் குறிப்பிட்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு தேவையான வாகனங்கள் இறக்குமதி செய்து அதன் பணிகள் அனைத்தும் நிறைவு பெற்றுள்ளது.

இந்நிலையில் வாகன இறக்குமதியை ஒரு வருடத்திற்கு ஒத்தி வைப்பதனால் எந்ததொரு பயனும் இல்லை. மக்களை ஏமாற்றும் செயற்பாடுகளில் தான் தற்போதைய அரசாங்கம் அதிகம் ஈடுபடுகின்றது’ என அவர் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]