மக்களே அவதானம் – கழிப்பறையில் பதுங்கி இருக்கும் கொடூர பாம்பு!!

கொடூர குணம் கொண்ட carpet python எனப்படும் தரைவாழ் மலைப்பாம்புகள் அண்மைக்காலத்தில் கழிப்பறையின் கழிப்புத் தொட்டிகளுக்குள் பதுங்கிக்கொள்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது தொடர்பான சம்பவங்கள் குயின்லாந்து நாட்டில் ஆங்காங்கே நடந்துவருவதாக கூறப்பட்டுள்ளது.

அண்மையில் குயின்லாந்தைச் சேர்ந்த பெண் ஒருவரின் கழிப்பறைக் கழிப்புத் தொட்டியில் மேற்படி மலைப் பாம்பு சுருண்டு படுத்துள்ளது. இதனைக் கண்டு அதிர்ச்சியுற்ற குறித்த பெண் அப்பகுதியிலுள்ள பிரபல பாம்பு பிடிப்பாளருக்கு தகவல் கொடுத்துள்ளார்.

சம்பவ இடத்திற்கு வருகைதந்த Budd எனும் பாம்பு பிடிப்பாளர், தான் அந்தப் பாம்பை அகற்றுவதில் மிகுந்த சிரமத்தினை எதிர் நோக்கியதாக கூறியுள்ளார்.

அதற்கு காரணம் குறித்த பாம்பு தனது உடலின் பெரும்பாலான பகுதிகளை கழிப்புத் தொட்டியின் குளாயினுள் செலுத்தி நின்றமையே என்கிறார். இதனால் அந்த பாம்பைப் பிடிப்பது மிகுந்த சிரமத்தினைக் கொடுத்ததாக அவர் கூறுகின்றார்.

carpet pythons பாம்புகள் உலகிலேயே மிகவும் கொடூரமான மலைப் பாம்பினங்களாகும். இவை தாம் குறிவைக்கும் உணவுகளைப் புசிப்பதற்காக வருடக்கணக்கில் காத்திருக்கவல்லன என்கிறார் Budd.

தற்பொழுது வட குயின்லாந்தில் இந்த வகையான பாம்பினங்கள் இனப்பெருக்கம் செய்யும் காலமாதலால் இவை தமது ஆண் துணையைத் தேடி நீண்ட தூரம் பயணிக்கவேண்டி உள்ளதாகவும் அதனால் இவற்றின் உடலில் ஏற்படும் நீர் இழப்பே இந்த மாதிரியான இடங்களை இவை தேடுவதற்கான காரணம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எவ்வாறாயினும் இவை இதுபோன்ற மறைவிடங்களில் காத்திருந்து தமது இலக்குகளை வேட்டையாடுவதாகவும் அவர் மறுக்காமல் கூறுகின்றார்.

இதேவேளை பாம்பினங்களைத் தொல்லை செய்வது குயின்லாந்தில் தடை செய்யப்பட்டிருந்தாலும் இதுபோன்ற கழிப்புத் தொட்டியினுள் சுருண்ட பாம்புகளை தொல்லைப்படுத்தாமல் வெளியில் எடுப்பதும் கடினமான காரியம் என்கிறார் அவர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]