மக்களின் பொறுமைக்கு எல்லையுண்டு – மனோ கணேஷன்

“பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவுக்கு பொலிஸ் துறை அமைச்சை கொடுக்க முடியாவிட்டால் அதை ராஜித, சம்பிக்க, அர்ஜுன ஆகிய மூவரில் ஒருவருக்கு கொடுங்கள்” என, அமைச்சர் மனோ கணேசன் கோரியுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்ட போதே அமைச்சர் மனோ கணேசன் இவ்வாறு கூறியுள்ளார்.

அத்துடன், இதுவும் முடியாவிட்டால் எம்மால் திருடர்களை பிடிக்க முடியாது என ஜனாதிபதியும், பிரதமரும் இந்நாட்டு மக்களிடம் மன்னிப்பு கோரி கதையை முடிக்க வேண்டும் எனவும் மனோ தெரிவித்துள்ளார்.

“மக்கள் நம்பிக்கை கொள்ளும் வகையிலான தீர்வை உடனடியாக ஜனாதிபதியும், பிரதமரும் பெற்றுக்கொடுக்க வேண்டும். மக்களின் பொறுமைக்கும், எங்களின் பொறுமைக்கும் ஒர் எல்லையுண்டு. மக்களை நம்பியே நாங்கள் பொதுவாழ்வில் உள்ளோம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]