மக்களால் வெளிப்படுத்தபட்ட உணர்வுகளை சர்வதேசமும், அரசும் அக்கறையோடு புரிந்து கொள்ளும்

மக்களால் வெளிப்படுத்தபட்ட உணர்வுகளை சர்வதேசமும், அரசும் புரிந்து கொள்ளும் என்று கிழ்ககு மாகாண விவசாய அமைச்சரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளருமாகிய கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்தார்.

நேற்று மேற்கொள்ளப்பட் பூரண கடையடைப்பு செயற்பாட்டிற்கு ஆதரவு வழங்கிய அனைவருக்கும் நன்றிகளைத் தெரிவிக்கும் ஊடக அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

மக்களால்

இந்த அறிக்கையில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தாம் நிறைவேற்றவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு கூடிய அக்கறை செலுத்த வேண்டும். காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்களின் கோரிக்கையின் அடிப்படையில் அழைப்பு விடுக்கப்பட்ட பூரண கடையடைப்பு வேண்டுகோள் தமிழ் மக்களால் பூரணமான முறையில் ஏற்று கடைப்பிடிக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பிற்கு எமது அணுசரணையும் இருந்தது.

எமது இந்த அணுசரணை அழைப்பினை ஏற்று இந்தக் கடையடைப்பு நிகழ்வு வெற்றி பெற ஒத்துழைத்த அனைத்து தமிழ் மக்களுக்கும் எமது இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நன்றிகளை உரித்தாக்குகின்றோம்.
குறிப்பாக வர்த்தக சமுகங்கள், போக்குவரத்துத் துறையினர், மாணவர்கள், தொழிலாளர்கள், உத்தியோகஸ்தர்கள், உள்ளிட்ட அனைத்துப் பொது மக்களும் தங்கள் உணர்வார்ந்த ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.

இச் செயற்பாட்டின் மூலம் வெளிப்படுத்தப்படுகின்ற உணர்வுகளை சர்வதேச சமுகமும், அரசும் அக்கறையோடு புரிந்து கொள்ளும் என நம்புகின்றோம். எனவே காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் தாம் நிறைவேற்றவுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவைக்கு அரசு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்றுவதில் அரசு கூடிய அக்கறை செலுத்த வேண்டும் என்று வேண்டுகோள் விடுப்பதோடு, சர்வதேச சமுகம் இவ்வுணர்வினை மதித்து கோரிக்கைகளை நிறைவேற்றும் வகையிலான செயற்பாடுகளுக்கு இன்னும் கூடுதலான அக்கறையையும், செயற்பாட்டுத் தண்மையையும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றோம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]