மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் – சூடான் போராட்டத்தில் 16 பேர் பலி!

ஆபிரிக்க நாடுகளில் ஒன்று சூடானில் 1993 ஆம் ஆண்டு முதல் இராணுவ ஆட்சித் தலைவர் பதவித்து வரும் உமர் அல் பஷீரை பதவி விலகக் கோரி ஆர்பாட்டங்கள் நடந்து வந்த நிலையில், அந்த நாட்டின் இராணுவ அமைச்சராக இருந்து வந்த அவாத் இப்ன் ஆப், கடந்த 11 ஆம் திகதி இராணுவத்தின் உதவியுடன் உமர் அல் பஷீரின் ஆட்சியை கவிழ்த்தார். இதன் காரணமாக அங்கு குழப்ப நிலை நிலவி வருகிறது.

அவாத் இப்ன் ஆப், இராணுவ ஆட்சிக்கு பொறுப்பேற்கும் வகையில் இராணுவ கவுன்சில் தலைவராக பதவி ஏற்றுள்ளார்.

இவர் உள்நாட்டுப்போரின்போது, இராணுவ உளவுத்துறை தலைவர் பதவியும் வகித்தவர் ஆவார். இதையொட்டி அவர் மீது 2007 ஆம் ஆண்டு அமெரிக்கா பொருளாதார தடையும் விதித்துள்ளது.

அத்துடன் 2 ஆண்டுகள் இராணுவ ஆட்சி தொடரும், அதன்பின்னர் தான் சூடானில் மக்களாட்சியை ஏற்படுத்தும் வகையில் தேர்தல் நடத்தப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

ஆனால் இராணுவ ஆட்சியை மக்கள் ஏற்கவில்லை. பெருமளவில் போராட்டங்களை மக்கள் நடத்த தொடங்கினர். 2 நாள் போராட்டத்தில் 16 பேர் கொல்லப்பட்டனர்.

இராணுவ ஆட்சித்தலைவர் அவாத் இப்ன் ஆப் பதவி விலகி விட்டார். இதை அவரே சூடானிக் அரச தொலைக்காட்சியில் அறிவித்திருந்தார்.

மேலும் இராணுவ ஆட்சியை லெப்டினன்ட் ஜெனரல் அப்தெல் பட்டா அப்தெல் ரகுமான் புர்ஹான் தலைமை ஏற்று தொடர்ந்து நடத்துவார் என்றும் கூறினார்.

இந்நிலையில், மக்களாட்சியை ஏற்படுத்தாதவரையில், வீதிகளை விட்டு விலக மாட்டோம் என்று போராட்டகாரர்கள் தெரிவித்துள்ளனர். இதன் காரணமாக அங்கு குழப்ப நிலை அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]