மகேஸ் சேனநாயக்க 50 ஆவது படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக நியமனம்

இராணுவத்தின் 50 ஆவது படைப்பிரிவின் தலைமை அதிகாரியாக முன்னாள் யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க இன்று தமது கடமைகளை உத்தியோகபூர்வமாகப் பொறுப்பேற்றார்.

இலங்கை இராணுவத் தலைமையகத்தில் இன்று காலை பௌத்த மதகுருமாரின் ஆசி வழங்கும் நிகழ்வுடன் அவர் தமது கடமைகளை பொறுப்பேற்றிருந்தார்.

இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் ரேனக உடவத்த உள்ளிட்ட உயர்நிலை இராணுவ அதிகாரிகள் இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.

இராணுவத் தலைமை அதிகாரியாக பணியாற்றிய மேஜர் ஜெனரல் சன்ன குணதிலக கடந்த மாத இறுதியில் ஓய்வு பெற்றதையடுத்து ஏற்பட்ட வெற்றிடத்துக்கு மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்கவை நியமிக்கப்பட்டுள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]