மகேந்திரன் எவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனரானார்?

இலங்கை பிரஜை அல்லாத அர்ஜுன மகேந்திரன் எவ்வாறு மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டார். வெசாக் முடிந்த கையோடு வழக்குத் தொடுக்க போகிறோம் என்று பொது எதிரணி தெரிவித்தது.

பொரள்ளையில் அமைந்துள்ள வஜிரசர்மா பௌத்த மத்திய நிலையத்தில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட பாராளுமன்ற உறுப்பினரான பந்துல குணவர்தன மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதுதொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கீதா குமாரசிங்க இரட்டை பிரஜாவுரிமையை கொண்டுள்ளதால் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக இருப்பதற்கு தகுதியற்றவரென மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்பொன்றினை வழங்கியிருந்தது. தீர்ப்பு தொடர்பில் கீதா குமாரசிங்க உயர்நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்துள்ளார்.

மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜுன மகேந்திரன் இலங்கையின் பிரஜையல்ல. சிங்கப்பூர் அரசியலமைப்பின் பிரகாரம் சிங்கப்பூர் பிரஜை மற்றுமொரு நாட்டின் பிரஜையாக இருக்கமுடியாது.

பிணைமுறி விவகாரத்தில் கோப் குழுவுக்கு அவர் வழங்கிய வாக்குமூலத்தில் தான் ஒரு இலங்கை பிரஜையல்ல என்பதை தெரிவித்துள்ளார். இலங்கை அரசியலமைப்பின் 105ஆவது உறுப்புரையின் பிரகாரம் மத்தியவங்கியின் ஆளுனராக தெரிவுசெய்யப்படும் நபர் சத்தியபிரமானம் செய்வேண்டும். ஆனால், அவர் சத்தியப்பிரமாணம் செய்துக்கொள்ளப்படாமலேயே மத்திய வங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்டிருந்தார்.

இலங்கைப் பிரஜையல்லாத அர்ஜுன மகேந்திரன் எவ்வாறு மத்தியவங்கியின் முன்னாள் ஆளுனர் நியமிக்கப்பட்டார்?. பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவால் மத்தியவங்கியின் ஆளுனராக நியமிக்கப்பட்ட அர்ஜுன மகேந்திரன் இலங்கைப் பிரஜையல்லாத நிலையில், மத்தியவங்கியின் ஆளுனராக சத்திய பிரமாணம் செய்யாத நிலையில் எவ்வாறு இலங்கையின் நாணயத்தில் அவரது கையொப்பம் இடம்பெற்றது.

எதிர்வரும் வெசாக் விடுமுறையை அடுத்து இலங்கையின் நாணயத்தில் வெளிநாட்டு பிரஜையான அர்ஜுன மகேந்திரனுக்கு கையெழுத்திட்டமை சட்டத்துக்குட்பட்ட செயலா? வெளிநாட்டு பிரஜையான அர்ஜுன மகேந்திரனுக்கு கையெழுத்திட்ட நாணயம் சட்டரீதியாக செல்லுபடியாகுமா? என்ற கேள்விகளுக்கு பதில் தேடும் நோக்குடன் வழக்கொன்றை தாக்கல் செய்ய தீர்மானித்துள்ளோம்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]