ஐ. தே.க. பிடி­யி­லி­ருந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளியேர வேண்டும் – மகிந்த ராஜ­பக்ச

ஐ. தே.க. பிடி­யி­லி­ருந்து மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளியேர வேண்டும் – மகிந்த ராஜ­பக்ச

மகிந்த ராஜ­பக்சஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிடி­யி­லி­ருந்து எப்­போது ஜனாதிபதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­யே­று­வாரோ, அன்றே அவ­ரு­டன் நேர­டிப் பேச்சு நடத்த முன்­வ­ரு­வேன். நாங்­கள் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்­சி­யில் இன்­ன­மும் இருக்­கி­றோம். எங்­க­ளைப் புறந்­தள்­ளி­ விட முடி­யாது. எதிர்­கா­லத்தை யோசிக்­காது தீர்­மா­னம் எடுத்­தால் அதற்­கான விலையை அவர்­கள் கொடுக்­க­வேண்­டி­ வ­ரும் என முன்­னாள் ஜனாதிபதி மகிந்த ராஜ­பக்ச தெரி­வித்­தார்.

சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி நடத்­திய நாடா­ளு­மன்­றக்­கு­ழுக் கூட்­டத்­தில் கலந்து கொள்­ளா­த­வர்­கள் மீது நட­வ­டிக்கை எடுக்­கப்­ப­ட­வுள்­ள­தாக செய்­தி­கள் வெளி­வந்­துள்­ளமை குறித்து கேட்­ட­ போதே அவர் மேற்­கண்­ட­வாறு கூறி­னார்.

அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது;

நாங்­கள் பேச்­சுக்கு வர­மாட்­டோம் என்று ஒரு­போ­தும் கூற­வில்­லையே. பேச்­சுக்கு வர முன்­னர் சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் பிடி­யி­லி­ருந்து வெளியே வர­வேண்­டும். ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் கட்­டுக்­குள் இருந்து எப்­போது ஜனாதிபதி தலை­மை­யி­லான சுதந்­தி­ரக் கட்சி வெளியே வரு­கி­றதோ, அன்றே அவர்­க­ளு­டன் நேர­டிப் பேச்­சுக்கு நாம் செல்­வோம்.

ஐக்­கிய தேசி­யக் கட்­சி­யின் எடு­பி­டி­யா­கவே இப்­போது சிறி­லங்கா சுதந்­தி­ரக் கட்சி செயற்­ப­டு­கி­றது. உண்­மை­யான கட்­சிப் போரா­ளி­கள் மன­த­ள­வில் என்­னு­டன்­தான் உள்­ள­னர். இன்­னும் சில வாரங்­க­ளில் யார் யாரு­டன் இருக்­கி­றார்­கள் என்­பதை நாடு அறிந்துகொள்­ளும் என்­றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]