மகிந்த அரசின் பேரம் மீள ஆரம்பம்- சிக்கப்பபோவது யார்??

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தற்போதைய மகிந்த அரசுக்கு நாடாளுமன்றில் 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் பெரும்பான்மையை நிரூபித்துக் காண்பிப்பதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 3 மில்லியன் அமெரிக்க டொலர் கையூட்டு வழங்குவதற்கான பேரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதற்காக எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர்களுடான பேரம் பேச்சுவதில் மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோசித ராஜபக்ச முன்னெடுத்துள்ளார் என்று மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

எதிரணி நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவருக்கு 50 கோடி ரூபாவை வரை கையூட்டு வழங்குவதற்கு இந்தப் பேச்சுக்கள் இடம்பெறுகின்றன. ராஜபக்ச தரப்பினரின் இந்த நடவடிக்கை வெட்கக்கேடானது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]