மகிந்தானந்த அழுத்கமகே கைது

முன்னாள் அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மகிந்தானந்த அழுத்கமகே, பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வினரால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

வாக்குமூலம் அளிப்பதற்காக மகிந்தானந்த அழுத்கமகே, பொலிஸ் நிதிக்குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு இன்று காலை சென்றிருந்தார்.

விளையாட்டுத்துறை அமைச்சராக செயற்பட்ட காலத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் நிதிமோசடி குறித்த விசாரணையில் வாக்குமூலம் அளிப்பதற்காக முன்னாள் அமைச்சருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

அதன்படி, இன்று முற்பகல் 9.30 மணிக்கு அங்கு முன்னிலையாகுமாறு நிதிக்குற்றப்புலனாய்வு திணைக்களத்தினர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு அறிவுறுத்தல் விடுத்திருந்தனர்.

கெரம் விளையாட்டு உபகரணம் இறக்குதி தொடர்பில் 53 மில்லியன் ரூபாய் மோசடியில் ஈடுபட்டதாக முன்னாள் அமைச்சர் மகிந்தானந்த அழுத்கமகேவுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]