மகிந்தவின் பதவியேற்பில் நிலைதடுமாறி கீழே விழுந்த சிறிசேன அமரசேகர

இலங்கை பிரதமராக மகிந்த ராஜபக்ச பணிகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட நிகழ்வில், அண்மையில் பிரதமரின் செயலராக நியமிக்கப்பட்ட சிறிசேன அமரசேகர நிலைதடுமாறி கீழே விழுந்தார்.

நேற்றுக்காலை பிரதமர் செயலகத்தில் நடந்த பதவியேற்பு நிகழ்வின் போதே இந்தச் சம்பவம் இடம்பெற்றது.

கீழே விழுந்த பிரதமர் மகிந்தவின் செயலாளர் சிறிசேன அமரசேகரவை, அருகில் நின்ற சி.பி.இரத்நாயக்க உள்ளிட்ட மகிந்த ஆதரவு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கைதூக்கி எழுப்பி விட்டனர்.

இந்தச் சம்பவத்தினால் பதவியேற்பு நிகழ்வில் சற்று சலசலப்பு ஏற்பட்டது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]