மகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் – இயக்குநர் பாரதிராஜா

மகாத்மா காந்தி கண்ட கனவை ஈழ மண்ணில் நேரடியாகப் பார்தேன் இயக்குநர் பாரதிராஜா

தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் எனபதை உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழமண்ணாகும் என தென்னிந்திய திரைப்பட இயக்குநர் பத்மஸ்ரீ பாரதிராஜா தெரிவித்தார்.

ஈழம் மற்றும் மலேசியா இரண்டுமே தமிழே எங்கள் இனத்தின் மொழி என்பதை பொத்திப் பொத்திக் காப்பாற்றிக்கொண்டிருக்கின்றன. நானும் ஆங்கிலம் கலந்து உரையாடுவேன் ஆனால் இந்த ஈழ மணணில் பிரபாகரன் ஆண்ட காலத்தில் அனைத்துமே தமிழிலே இருந்தன என்றும் அவர் கூறினார்

ஆகிலன் மாற்றுத்திறன் குழந்தைகளின் கலை நிகழ்வு மற்றும் கலைஞர்கள் கௌரவிப்பு மட்டக்களப்பு செங்கலடி சௌபாக்கியா மண்டபத்தில் புதன்கிழமை (17) மாலை நடைபெற்றது.

அகிலன் பவுண்டேசன் ஸ்தாபகர் மு. கோபாலக்கிருஸ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் தெனனிந்திய திரைப்பட இயக்குனர் கலாநிதி பாரதிராஜா, திரைப்பட நடிகர் மற்றும் இயக்குனரான பாக்கியராஜ், நடிகர் விதார்த், நடிகை நட்சத்திரா, திரைப்பட தொகுப்பாளர் சுரேஸ்காமாட்சி உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இந்நிகவில் 20 மூத்த கலைஞர்களும் 5 இளம் கலைஞர்களும் கௌரவிக்கப்பட்டனர்.

புலியை புறத்தால் விரட்டிய தமிழச்சி என்று படித்திருக்கிறேன் ஆனால் பார்த்தது இந்த பூமஜல்; மட்டும்தான். வீர மரண என்ற தகுதி ஈழ மண்ணிலே தன்னுயிரை கொடுத்து விடுதலைக்காகப் போராடிய தலைவர் பிரபாகரனுக்கு ஈடில்லை.

வள்ளுவர் பிறந்தார் பெரிய பெரிய இலக்கிய மேதைகள் கம்பராமாயணம் படைத்தார் தமிழகம் அற்புதமான பூமி ஆனால் தமிழ் என்ற ஒரு மொழியும் தமிழன் என்ற ஒரு இனமும் ஒரு வீரம் கொண்ட கறுப்பு முகம்தான்; தமிழன் என உலக்கத்து எடுத்துக்காட்டியது ஈழமண்ணாகும்.

பெண்கள் கழுத்து முழுக்க நகை அணிந்து இரவு 12 மணிக்கு வீதியிலே சென்றுவிட்டு பத்திரமாக வீடு திரும்புகிறாளே அன்றுதான் இந்த நாட்டுக்கு பெருமையுண்டு சுதந்திரம் உண்டு என மகாத்மா காந்தி இன்று சொன்னார். இது இந்தியாவில் நடக்கவில்லை. ஆனால் அவரது கனவை ஈழ மண்ணில் வன்னிப் பிரதேசத்தில் நேரடியாகப் பார்த்தேன்.

மகாத்மா காந்தி மகாத்மா காந்தி மகாத்மா காந்தி மகாத்மா காந்தி மகாத்மா காந்தி

மனிதன் மறைந்து போனாலும் தமது தடையங்களை பதிவுசெய்துவிட்டு செல்ல வேண்டும். இது இந்த பூமிக்கு நாம் செலுத்த வேண்டிய வாடகை. எமது பிறப்பில் எமது கலைகளைக் காப்பாற்ற வேண்டும். இந்த மேடையில் கௌரவிக்கப்படவுள்ள கலைஞர்கள் உங்கள் தடங்களைப் பதிவு செய்துள்ளீர்கள்.

ஈழ மண்ணில் அற்புதமான கலைஞர்க்ள உள்ளார்கள் பெரிய இலக்கியவாதிகள் உருவாகியுள்ளனர் இயக்குனர் பாலுமகேந்திரா இந்த மண்ணிலிருந்துதான் வந்திருந்தார் இங்குள்ளவர்களுக்கும் சரியான வாய்ப்புகள் கிடைத்திருந்தால் மிகச்சிறந்த கலைஞர்கள் உருவாகுவார்கள் என்றார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]