காந்தியின் 148வது ஜெயந்தி தினம் யாழ்ப்பாணத்தில்

(யாழ்ப்பாணம்) அகிம்சாவதி மகாத்மா காந்தி யின் 148வது ஜெயந்தி தினம் மற்றும் சர்வதேச அஹிம்சை தின நிகழ்வுகள் இன்று யாழில் வெகு சிறப்பாக அனுஸ்டிக்கப்பட்டது.

அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் ஏற்பாட்டில் அதன் தலைவர் ஏ.சிவகரன் தலைமையில் இந்நிகழ்வு இன்று (02.10) காலை 10.00 மணியளவில் யாழ்.ஆஸ்பத்திரி வீதியில் உள்ள மகாத்மாந்தியின் உருவச் சிலைக்கு ன்பாக இடம்பெற்றது
இதன்போது இந்திய துணை தூதுவர் ஏ.நடராஜன் பிரதம அதிதியாக கலந்துகொண்டு மகாத்மா காந்தியின் உருவச்சிலைக்கு மாலை அணிவித்தார்.மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

மகாத்மா காந்தி

தொடர்ந்து இந்து, கிறிஸ்தவ, பௌத்த மத தலைவர்கள் உள்ளிட்டவர்களும் இந்தியாவிலிருந்து விசேடமாக வருகை தந்திருந்த பேச்சாளர் ஞானசம்பந்தன் ஆகியோரும் மலர்மாலை அணிவித்ததுடன் மலரஞ்சிலியும் செலுத்தினார்கள்.

அத்துடன் மகாத்மா காந்தி தொடர்பான பாடல்கள் இங்கு மாணவர்களால் இசைக்கப்பட்டதுடன் மரக்கன்றுகளும் இங்கு வழங்கிவைக்கப்பட்டது. அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் உறுப்பினர்களும் மலர் மாலை அணிவித்ததுடன், யாழ்.பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் சண்முகநாதன் மற்றும் காந்தியவாதிகளும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]