மகாசிவராத்திரி : எம்.ஜி.ஆர். பாட்டுக்கு ஜக்கியுடன் சேர்ந்து ஆடிய தமன்னா, காஜல் வைரலாகும் வீடியோ…

மகாசிவராத்திரியை முன்னிட்டு நடிகைகள் காஜல் அகர்வால், தமன்னா ஆகியோர் ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து எம்.ஜி.ஆர். பாடலுக்கு டான்ஸ் ஆடியுள்ளனர். மகாசிவராத்திரியை முன்னிட்டு கோவையில் உள்ள இஷா யோகா மையத்தில் சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இஷா மையத்தில் நடக்கும் நிகழ்ச்சியில் நடிகைகள் கலந்து கொள்வது வழக்கமாகி வருகிறது. கடந்த ஆண்டை போன்றே இந்த ஆண்டும் சிவராத்திரி நிகழ்ச்சியில் நடிகை தமன்னா கலந்து கொண்டார். நடிகை காஜல் அகர்வால் தன் தங்கை நிஷாவுடன் இஷா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

நடிகர் ராணாவும் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு தமன்னா, காஜலுடன் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் ண்டார். சிவராத்திரியையொட்டி பாடகர் கார்த்திக்கின் இசை நிகழ்ச்சி நடந்தது. அவர் அதோ அந்த பறவை போல வாழ வேண்டும் என்ற எம்.ஜி.ஆர். பாடலை பாட ஜக்கி வாசுதேவுடன் சேர்ந்து தமன்னா, காஜல், நிஷா ஆகியோர் நடனம் ஆடினார்கள்.

நடிகைகள் நடிகை காஜல் ஒரே டான்ஸ் மூடில் இருந்தார். நிகழ்ச்சியின் பெரும்பகுதி ஆடிக் கொண்டே இருந்தார். காஜல், தமன்னா தவிர்த்து நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். மக்கள் இஷா யோகா மையத்தில் நடந்த சிவராத்திரி நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்டார். ஆயிரக்கணக்கான மக்கள் விடிய விடிய நடனம் ஆடினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]