மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 136ஆவது பிறந்ததினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது

மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் 136ஆவது பிறந்ததினம் யாழில் இன்று கொண்டாடப்பட்டது.

யாழ் இந்திய துணைத்தூதரகத்தின் ஏற்பாட்டில் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் 130வது பிறந்ததினம் இன்றுகாலை யாழ் நல்லூர் அரசடியில் அமைந்துள்ள பாராதியாரின் உருவச்சிலை முன்பாக நடைபெற்றது.

யாழ் இந்திய துணைத்தூதுவர் எஸ்.பாலச்சந்திரன் தலைமையில் நடைபைற்ற இந்த நிகழ்வின்போது பிரதம அதிதிகள் மற்றும் பாடசாலை மாணவர்களினால் மகாகவி சுப்ரமணிய பாரதியாரின் உருவச்சிலைக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டதுடன் பாரதியார் கீதங்களும் இசைக்கப்பட்டது

இந்த நிகழ்வினை முன்னிட்டு மரக்கன்றுகளும் பொதுமக்களுக்கு வழங்கிவைக்கப்பட்டது

இந்த நிழ்வில் வடமாகாணசபை தலைவர் சி.வி.கே.சிவஞானம்,யாழ் மாவட்ட அரசாங்க அதிபர் நாகலிங்கன்,வடமாகாண எதிர் கட்சி தலைவர் சி.தவராசா,வடமாகாண ஆளுனரின் செயலாளர் இ.இளங்கோவன் மற்றும் சமயத்தலைவர்கள் , பேராசிரியர்கள் , மாணவர்கள் ஊடகவியலாளர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]