நடிகா. விஜய் தனது மகள் ஷட்டில் காக் விளையாடுவதை ஓரமாக நின்று பார்த்து ரசிக்கும் புகைப்படம் இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
தமிழகத்தில் முன்னணி நடிகர்களில் விஜய்யும் ஒருவர். பிரமாண்ட ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெர்சல் படம் 100 நாட்களை கடந்து திரையில் வெற்றி பெற்றது. அந்த படத்தை தொடர்ந்து தற்போது எ.ஆர். முருகதாஸ் இயக்கி வரும் படத்தில் நடித்து கொண்டிருக்கிறார்.
விஜய்க்கு சஞ்சய் என்ற மகனும், சாஷா என்ற மகளும் உள்ளனர். தற்போது விஜய்யின் மகள் ஷட்டில் காக் விளையாடும் போது அதனை கூட்டத்தில் ஒருவராக விஜய் ஓரத்தில் இருந்து பார்த்து ரசிக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
தனது மகன் சஞ்சய்யை வேட்டைக்காரன் படத்தில் ஒரு பாடலுக்கு நடனம் ஆட வைத்து திரையில் அறிமுகம் செய்தார். அதேபோல் மகளை ‘தெறி’ படத்தில் கடைசி காட்சியில் அறிமுகம் செய்து வைத்திருந்தார். இருந்தாலும் மீடியா பக்கம் அவ்வளவாக தலை காட்டுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த புகைப்படம் நெட்டிசன்கள் மற்றும் ரசிகர்கள் பலராலும் ஷேர் செய்யப்பட்டு வருகிறது.
Website – www.universaltamil.com
Facebook – www.facebook.com/universalta
Twitter – www.twitter.com/Universaltha
Instagram – www.instagram.com/universalt
Contact us – [email protected]