மகள் வயதுடைய காதலியை கரம்பிடிக்கும் பிரபல நடிகர்? என்னத்த சொல்லுறது மக்களே!!

பிரபல மாடலும், நடிகருமான மிலிந்த் சோமன் மகள் வயது பெண்ணை திருமணம் செய்யப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிரபல மாடலும், நடிகருமான மிலிந்த் சோமன் மாரத்தான் போட்டிகளில் கலந்து கொண்டு வருகிறார். 52 வயதாகும் அவர் விமான பணிப்பெண்ணான அங்கிதா கொன்வரை(26) காதலிக்கிறார்.

இருவரும் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார்கள்.

அங்கிதா கொன்வர் தான் மிலிந்த் சோமனின் கையை பிடித்திருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார். அவர் கையில் இருக்கும் மோதிரத்தை பார்த்து அவர்களுக்கு திருமணம் நிச்சயமாகிவிட்டது என்று பேச்சு கிளம்பியுள்ளது.

மிலிந்த் சோமனுக்கும், அங்கிதாவுக்கும் வரும் 21ம் தேதி அலிபாக்கில் வைத்து திருமணம் நடக்க உள்ளதாம். இந்த திருமண நிகழ்ச்சிக்கு நெருங்கிய நண்பர்கள், குடும்பத்தாருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாம். திருமணத்தை கோலாகலமாக கொண்டாட அவர்கள் விரும்பவில்லையாம்.

அலிபாகில் திருமணம் முடிந்த பிறகு அங்கிதாவின் சொந்த ஊரான கவுஹாத்தியில் பார்ட்டி கொடுக்க முடிவு செய்துள்ளாராம் மிலிந்த் சோமன். அப்பா வயது நபரை காதலிப்பதாகக் கூறி அங்கிதாவை சமூக வலைதளங்களில் பலரும் அவ்வப்போது கிண்டல் செய்வதுண்டு.மிலிந்த் சோமனுக்கு திருமணம் என்று செய்திகள் வெளியானதை அடுத்து பிரபல ஆங்கில் நாளிதழ் ஒன்று அவரை அணுகியுள்ளது. அவர் திருமண செய்தியை ஒப்புக் கொள்ளவும் இல்லை அதே சமயம் மறுக்கவும் இல்லை.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]