மகள் நடிகை ஆவதில் விருப்பம் இல்லை: ஸ்ரீதேவி

ஸ்ரீதேவி இந்தியில் நடித்து இருக்கும் படம் ‘மாம்’. தமிழிலும் வெளியாகும் இந்த படத்தை ரவிஉத்யவார் இயக்கி இருக்கிறார். ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரித்து இருக்கிறார்.

இந்த படத்தின் அறிமுக நிகழ்ச்சி சென்னையில் நடந்தது. அப்போது பேசிய ஸ்ரீதேவி… “ ‘மாம்’ படம் தாய்-மகள் சம்பந்தப்பட்ட உணர்வுபூர்வமான கதை. இந்த கதையை கேட்டதுமே நடிக்க சம்மதித்து விட்டேன்.

தமிழிலும் இந்த படம் வெளியாகிறது. தமிழ் பட உலகம் எனக்கு ஆதரவு அளித்ததையும், என் மீது அன்பு காட்டியதையும் எப்போதும் மறக்க மாட்டேன். என் படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசை அமைக்க வேண்டும் என்பது எனது கனவாக இருந்தது. அது நடந்து விட்டது.

அவர் இசை அமைத்ததன் மூலம் இந்த படத்தின் மதிப்பு மேலும் உயர்ந்து இருக்கிறது. ‘மாம்’ படத்தை அனைத்து தாய்மார்களுக்கும் அர்பணிக்கிறேன். நான் சினிமாவுக்கு வந்து 50 வருடங்கள் ஆகிவிட்டது.

வாழ்க்கையில் எதையும் நான் திட்டமிடவில்லை. எல்லாம் தானாகவே நடக்கிறது. நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் தமிழ் படங்களில் நடிப்பேன்.

நாட்டில் பெண்கள் வாழ்வில் இன்னும் முன்னேற்றம் ஏற்படவில்லை. பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. என் மகள் நடிகை ஆவதை நான் விரும்பவில்லை. பெற்றோர் என்ற முறையில் அவருக்கு நான் திருமணம் செய்து வைப்பதே மகிழ்ச்சி. என்றாலும் அவள் நடித்து வெற்றி பெற்றாலும் மகிழ்ச்சிதான்” என்றார்.

ஏ.ஆர்.ரகுமான், “எல்லா நாட்டிலும் குடும்ப உறவுகள் என்பது முக்கியமாக இருக்கிறது. பிள்ளைகளை வளர்த்து ஆளாக்க பெற்றோர் பெரிய தியாகங்களை செய்கிறார்கள். ‘மாம்’ படமும் அந்த கருவில்தான் தயாராகி இருக்கிறது” என்றார்.

இந்நிகழ்ச்சியில் போனிகபூர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]