மகள் செய்த செயலால் வலுக்கட்டாயமாக விமானத்தைவிட்டு இறக்கப்பட்ட தந்தை!!

அமெரிக்காவில் விமானத்தில் பயணம் செய்த தந்தை – மகள் வலுக்கட்டாயமாக இறக்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிலும் இறக்கிவிடப்பட்டதற்கான எரிச்சலை ஏற்படுத்துகிறது.

சிக்காகோவில் இருந்து அட்லாண்டாவை நோக்கி பயணிகள் விமானம் ஒன்று புறப்பட தயாராக இருந்தது. இந்த விமானத்தை குறிப்பிட்ட நபர் ஒருவர் தனது இரண்டு வயது மகளுடன் பயணித்தார்.

இவரது மகள் விமானத்தில் பயணிக்க ஏற்பட்ட பயத்தின் காரணமாக அழுதுக்கொண்டு அவளுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இருக்கையில் அமராமல் தந்தையின் மடி மீது அமர்ந்திருந்தால். ஆனால் இதற்கு விமான அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

குழந்தை அழக்கூடாது எனவும், தனி இருக்கையில்தான் அமரவேண்டும் இல்லையெனில் விமானத்தை விட்டு இறங்கும்படியும் கண்டிப்புடன் கூறியுள்ளனர்.

இதனால் வேறு வழியின்றி தந்தையும் மகளும் விமானத்தைவிட்டு இறங்கியுள்ளனர். இந்த சம்பவம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணையும் நடைபெற்று வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]