மகளை பக்கத்தில் வைத்துக்கொண்டு இரண்டாவது மனைவியின் உடல் கவர்ச்சியை வர்ணித்த பிரபல நடிகர் – வைரல் வீடியோ

கேதார்நாத் என்ற பாலிவுட் படத்தில் நடித்துள்ளவர் சாரா அலிகான். இவர் பாலிவுட்டின் பிரபல நடிகர் சயிப் அலிகானின் மகள். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது.

தற்போது பிரபல நடிகை கரீனா கபூரை திருமணம் செய்துள்ள சயிப் அலிகானின் முதல் மனைவிக்கு பிறந்தவர் சாரா.

இந்நிலையில், சயிப் தனது மகள் சாராவுடன் காபி வித் கரண் என்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டுள்ளார்.

அந்த நிகழ்ச்சியில், உங்களது மனைவி கரீனா கபூர் ஜிம்முக்கு செல்வது மிகவும் பிரபலமாக உள்ளது. குறிப்பாக அவரது உடல் அமைப்பு கவர்ச்சியான உடல் அமைப்பு குறித்து கேள்வி எழுப்பப்பட்டது,

அதற்கு, தனது மகளை அருகில் வைத்துக்கொண்டே சயிப் தயக்கமில்லாமல், ஒவ்வொரு நாளும் கரீனா ஜிம்முக்கு செல்லும் போது அவர் உடல் அமைப்பு எப்படி இருக்கிறது? அவர் வந்த பிறகு அவர் உடல் அமைப்பு எப்படி இருக்கிறது என்று பார்ப்பது எனது வழக்கம் என்று கூறியுள்ளார்.

இதனை கேட்க விருப்பமில்லாத சாரா தனது காதை மூடிக்கொண்டார். இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]