மகளுக்காக சன்னிலியோன் எடுத்த உறுதிமொழி

மகளை காக்க, தனது உயிரையும் கொடுக்க தயாராக இருப்பதாக நடிகை சன்னி லியோன் தெரிவித்துள்ளார்.

நாடுமுழுவதிலும் கத்துவா, உன்னா பகுதி வன்புணர்வு வழக்கும் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியுள்ள நிலையில், நடிகை சன்னி லியோன் தனது மகளை இத்தகு சம்பவங்களில் இருந்து உயிர் கொடுத்தேனும் காப்பாற்றுவேன் என கூறியுள்ளார்.

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் கத்துவா பகுதியில் 8 வயது சிறுமி ஒருவரை 8 பேர் கொண்ட கும்பல வன்புணர்வு செய்து கொலை செய்துள்ளனர். அதேபோல் உபியின் உன்னா நகரில் 18 வயதுக்குட்பட்ட பெண்ணை பாஜக MLA வன்புணர்வுக்கு ஆளாக்கியுள்ளார்.

இச்சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து நாடுமுழுவதிலும் பிரபலங்கள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில் இன்று பொலிவுட் நடிகை சன்னி லியோன் தனது ட்விட்டர் பக்கத்தில்,

“இந்த உலக்கித்தில் இருக்கும் கொடியவர்களிடன் இருந்து உன்னை எந்நாளும் காப்பேன். அதற்கு விலையாக என் உயிரை கொடுக்கவேண்டும் என்றாலும் கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார்.

இந்த பதிவில் அவர் தனது மகளை பற்றிக்கொண்டு இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றினையும் இணைத்து பதிவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]