மகளீர் விவசாய அமைப்புக்களுக்கான நுண் நிதி நடவடிக்கை தொடர்பான பயிற்சிச் செயலமர்வு

விவசாய அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகத்தினால் முன்னெடுக்கும் தேசிய உணவு உற்பத்திப் புரட்சி சிதமுவ மகளீர் விவசாய அமைப்புக்களின் வேலைத்திட்டத்தின் கீழ்நடைமுறைப் படுத்தப்படும் நுண் நிதி நடவடிக்கை தொடர்பான கமநல திணைக்கள உத்தியோகஸ்தர்களுக்கான பயிற்சிச் செயலமர்வு சத்துருக் கொண்டான் சர்வோதய பயிற்சி நிலையத்தில் மாவட்ட கமநல அபிவிருத்தித் திணைக்கள பிரதி ஆணையாளர் நடராஜா சிவலிங்கம் தலைமையில் இன்று வியாழக்கிழமை (05) நடைபெற்றது.

மாவட்டத்திலுள்ள 17 கமநல சேவை நிலையங்களிலுள்ள உத்தியோகஸ்தர்களுக்கு கிராம சக்தி அபிவிருத்தி வேலைத் திட்டங்களை சிறப்பாக முன்னெடுக்க விவசாயிகள் சேமிக்கும் இக்கமநல வங்கியின் முகாமைத்துவ விடயங்கள் சாதாரண கணக்கு அறிக்கையிடல் வரவு செலவு தனியார் கணக்கு நிதிப்பட்டியல் உபகரணப் பட்டியல் என நுண் நிதி நடவடிக்கை தொடர்பான விளக்கவுரைகள் இங்கு வழங்கப்பட்டன.

ஜனாதிபதி செயலகத்தின் தேசிய உணவு உற்பத்தித் திட்ட ஆலோசகர் ஆ.றி கருணாரத்ன இவ் நிகழ்வில் பிரதான வளவாளராகக் கலந்து கொண்டு இப்பயிற்சி செயலமர்வை முன்னெடுத்தார்.

கிழக்கு மாகாணத்திற்கான முதலாவது நிகழ்வாக மட்டக்களப்பு மாவட்டத்தில் இவ் வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந் நிகழ்வில் மாவட்ட கமநல சேவை அபிருத்தித் திணைக்கள உயர் அதிகாரிகள் பெரும்பாக உத்தியோகத்தர்கள் மற்றும் விவசாய ஆராய்ச்சி உற்பத்தி அதிகாரிகள் மற்றும் அபிவிருத்தி திட்ட ஊழியர்கள் மற்றும் விவசாய மகளீர் அமைப்பு பிரதிநிதிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]