மகளின் செய்கையால் பாதுகாவலர்களை அனுப்பிய நடிகை

மகளின் செய்கையால் பாதுகாவலர்களை அனுப்பிய நடிகை

Jahnavi Kapoor

ஸ்ரீ தேவி மகள் ஜான்வி கபூர் ஹிந்தி திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருக்கிறார்.

ஷாருக்கான், ஐஸ்வர்யாராய் என பிரபலங்கள் நடித்த படங்களை இயக்கிய கரண் ஜோஹர், மராத்தியில் வெளியாகி வெற்றி பெற்ற ‘சாய்ரத்’ படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்கிறார்.

இப்படத்தின் மூலம் ஜான்வி கதாநாயகியாக அறிமுகம் ஆகிறார்.

Jahnavi Kapoor

சாய்ரத் திரைப்படத்தில் நடித்திருந்த ரிங்கு, பணக்கார பெண்ணாகவும் பைக் ஓட்டும் காட்சிகளிலும் நடித்திருந்தார்.

அந்த வேடத்தை ஜான்வி ஏற்பதால் பைக் ஓட்ட கற்க வேண்டும் என்று கரண் இயக்குனர் தெரிவித்துள்ளார்.

இதனால் கடந்த சில நாட்களாக ஜான்வி பைக் ஓட்டுவதற்கு பயிற்சி எடுத்து வருகிறார்.

Jahnavi Kapoor

அவருக்கு பாதுகாப்பாக இரண்டு பாதுகாவலர்களை அனுப்பி வைத்திருக்கிறார் ஸ்ரீ தேவி.

பயிற்சி முடியும் வரை ஜான்விக்கு பாதுகாப்பாக அவர்கள் உடன் இருப்பார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]