ப்ரியங்காவின் திருமணம் நடக்கும் அரண்மனையின் ஒரு நாள் வாடகை எவ்வளவு தெரியுமா? கேட்டா ஆடிபோயிடுவிங்க!

பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா மற்றும் அமெரிக்க பாடகர் நிக் ஜோனஸின் திருமணம் எதிர்வரும் டிசம்பர் முதலாம் திகதி நடைப்பெறவுள்ளது.

இவர்களின் திருமணம் ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் உள்ள உமைத் பவன் அரண்மனையில் பிரமாண்டமாக நடைபெற உள்ளது.

அந்த அரண்மனையின் ஒரு நாள் வாடகை மட்டும் ரூ. 43 லட்சமாம். இவர்களின் திருமண நிகழ்ச்சி அங்கு நான்கு நாட்களுக்கு நடைபெற உள்ளது. அப்படி என்றால் மொத்த வாடகை மட்டும் ரூ. 1 கோடியே 72 லட்சம்.

இவர்களின் காதல் கடந்த வருடம் விருது விழா ஒன்றில் சந்தித்த போது ஆரம்பமானது. கடந்த ஆகஸ்ட் மாதம் நிச்சயதார்த்தம் நடந்தது.

நிச்சயதார்த்தத்திற்கு நிக் ப்ரியங்காவுக்கு ரூ. 2 கோடி மதிப்புள்ள மோதிரத்தை அணிவித்தார்.

ப்ரியங்காவுக்கு ஏற்கனவே நியூயார்க் நகரில் சொந்தமாக வீடு உள்ளது நிலையில், கலிபோர்னியா மாகாணத்தில் ஹாலிவுட் பிரபலங்கள் அதிகம் வசிக்கும் பெவர்லி ஹில்ஸ் பகுதியில் ப்ரியங்கா, நிக் இருவரும் திருமணத்திற்கு பிறகு குடியேறவுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]