பௌத்த மதத்திற்கு பாதிப்பு இன்றி மே தினத்தை அனுஷ்டிக்கும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு!!

உலக தொழிலாளர் தினத்தினை மே 01 திகதி கொண்டாட தமிழ் தேசிய கூட்டமைப்பு தீர்மானித்துள்ளதாகவும், அந்த தீர்மானத்தினால் பௌத்த புனித நாளுக்கு எந்த தீங்கும் எற்பாடாது என்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் செயலாளர் துரைரட்ணசிங்கம் தெரிவித்தார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.சுமந்திரனின் வீட்டில் நேற்று (26) நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

உலக தொழிலாளர் தினத்தினை பௌத்த புனித நாளுக்கு எந்தவித பங்கமும் ஏற்படாத நாளில் நடாத்துவதற்கும் முன்னர் ஒரு முறை நடந்தவற்றினைப் போன்று ஒத்துழைப்புத் தாருங்கள் என்ற வகையில், இருந்தும் உலக தொழிலாளர்களின் தினம் என்பதனால், அரசாங்கத்தின் வேண்டுகோளை கௌரவப்படுத்த வேண்டும் என்பதனாலும், வெசாக் நிகழ்வுகள் நடைபெறுகின்ற இடங்களில் மே தின நிகழ்வுகளை நடாத்தாது. வுடகிழக்கினைப் பொறுத்தவரையில் தமிழ் பேசும் மக்கள் செறிந்து வாழும் இந்த பிரதேசத்தில் அங்குள்ள பௌத்த தலங்களுக்கு இடையூறுகளை விளைவிக்காத வகையில், உலக தொழிலாளர் தினத்தினை மே 01 ஆம் திகதியே கொண்டாட வேண்டுமென்று தீர்மானித்துள்ளோம்.

இந்த தீர்மானம் எந்தவிதத்திலும், பௌத்த புனித நாளை அகவுறவுப்படுத்துவதாக ஆகாது. பேளத்த மக்களை கண்ணியப்படுத்தும் முகமாக யாழ்.மாவட்டத்தினைப் பொருத்தவரையில் பருத்தித்துறையில் தொழிலாளர் தினத்தினைக்கொண்டாடுவதற்கும், கிழக்குமாகாணத்தில் மட்டக்களப்பு, அம்பாறை, திருகோணமலை உள்ளடக்கியதாக வெள்ளாவெளிப் பிரதேச சபையின் விளையாட்டு மைதானத்திலும் கொண்டாட தீர்மானித்துள்ளோம்.

உலக மேதினக் கொண்டாடத்திற்கான தீர்மானம் பௌத்த மகாநாயக்கர்களின் வேண்டுகோளைப் புறக்கணித்ததாக அமையாது. அவர்களை கண்ணியப்படுத்தும் முகமாக, இந்த மேதின நிகழ்வுகள் ஒழுங்குபடுத்தப்பட்டுள்ளன.

வடகிழக்கு வாழ் மக்களின் செயற்பாட்டினை கண்ணியப்படுத்தும் முகமாக மேதினக்கூட்டத்தினை 12 மணிக்குப் பின்னர் வர்த்தக வியாபார உரிமையாளர்கள், தமது வர்த்தக நிலையங்களை மூடி தொழிலாளர்கள் மே தினக் கூட்டத்தில் கலந்துகொள்வதற்கு ஒத்துழைப்பு வழங்குமாறு வர்த்தக் பெருந்தகைகளிடம் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் வேண்கோள்விடுத்துள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]