பௌத்த சமயம் தொடர்பில் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து போலியான பிரச்சாரங்களையும் நிராகரிக்கிறேன் : ஜனாதிபதி

பௌத்த சமயம் தொடர்பில் அரசாங்கத்திற்கெதிராக முன்னெடுக்கப்படும் அனைத்து போலியான பிரச்சாரங்களையும் நிராகரிப்பதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

அரசியலமைப்பில் பௌத்த சமயத்துக்குரிய இடத்தை அதேபோன்று தொடர்ந்தும் பாதுகாத்து ஏனைய சமயங்களுக்கும் நியாயத்தை வழங்குவது அரசாங்கத்தின் நிகழ்ச்சித்திட்டமென குறிப்பிட்ட ஜனாதிபதி, பௌத்த சாசனத்தின் பாதுகாப்பு தொடர்பில் அரசியலமைப்புக்கேற்ப அரசாங்கம் பொறுப்புக்களை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடன் இருப்பதாகவும் தெரிவித்தார்.

இன்று (10) முற்பகல் பத்தரமுல்லை அபேகம வளாகத்தில் நடைபெற்ற ரணவிரு வீடுகள் மற்றும் காணி உறுதிகள் வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஜனாதிபதி இதனைத் தெரிவித்தார்.

சர்வதேச வெசாக் தின நிகழ்வு இலங்கையில் நடைபெறுவது பௌத்த தத்துவத்தின் உன்னத செய்தியை உலகெங்கும் எடுத்துச் செல்லும் நோக்கிலேயாகும் என்று ஜனாதிபதி கூறினார்.

நாட்டுக்காகவும் மக்களுக்காகவும் எமது படையினர் மேற்கொண்ட பணிகளை இந்நாட்டு மக்கள் ஒருபோதும் மறந்துவிட முடியாது எனக்குறிப்பிட்ட ஜனாதிபதிஇ அவர்களுக்கு தற்போது வழங்கப்படும் சலுகைகளை மேலும் அதிகரித்து அவர்களது நலன்பேணலுக்காக மேற்கொள்ள வேண்டிய கடமைகளை நிறைவேற்றுவதற்கு அரசாங்கம் பொறுப்புடன் செயற்படுவதாகத் தெரிவித்தார்.

தான் ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்ட பின்னர் இராணுவத்தின் நலன்பேணலுக்காக பல்வேறு நிகழ்ச்சித் திட்டங்களை நடைமுறைப்படுத்தியுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

‘நமக்காக நாம்’ ரணவிரு வீடமைப்பு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் 90 ரணவிரு வீடுகளுக்கான உரிமைப்பத்திரங்களை ஜனாதிபதி வழங்கிவைத்தார்.

‘சத்விரு சங்ஹி’ திட்டத்தின் கீழ் வீடமைப்புக்காக 503 இராணுவத்தினருக்கு தலா ஏழு இலட்சத்து ஐம்தாயிரம் ரூபா வழங்கிவைக்கப்பட்டது.

இராணுவத்தினருக்கான 65 காணி உரிமைப்பத்திரங்கள் வழங்குதல்இ ‘விரு சிசு பிரதிப’ புலமைப்பரிசில்கள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சித்திட்டங்கள் இதன்போது நடைமுறைப்படுத்தப்பட்டன.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன. பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி முப்படைகளின் தளபதிகள்இ பொலிஸ் மா அதிபர்இ சிவில் பாதுகாப்புப் படையணியின் பணிப்பாளர் நாயகம் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]