போஷாக்கின்மையால் சுமார் 7.5மில்லியன் குழந்தைகள் பாதிக்கப்படுவர் – யுனிசெவ்

உலகளாவிய ரீதியில் குழந்தைகள் போஷாக்கின்மையால் இந்த ஆண்டு கடுமையாக பாதிக்கப்படுவார்கள் என்று யுனிசெவ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகளின் குழந்தைகளுக்கான நிறுவனமான யுனிசெவ் தெரிவித்துள்ள அறிக்கையில் சுமார் 7.5 மில்லியன் குழந்தைகள் இந்த ஆண்டு அதிகளவில் பாதிக்கப்படவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

மோதல்கள் இடம்பெறும் சிரியா, நைஜீரியா மற்றும் ஏமன் உட்பட பிற மனிதநேய நெருக்கடிகள் நடைபெறும் இடங்களிலுமுள்ள 48 மில்லியன் குழந்தைகளுக்கு உதவ 3.3 பில்லியன் டொலர் தேவைப்படுவதாக இந்த நிறுவனம் சுட்டிக்காட்டியுள்ளது.

சுத்தமான குடிநீர் மற்றும் தட்டம்மை தடுப்பூசி, அடிப்படை பராமரிப்பு மற்றும் கல்விக்காகவும் இந்த நிதிகள் பயன்படுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
ஏழாம் ஆண்டாக போர் நடைபெற்று வருகின்ற சிரியாவில் இந்த நிதியில் மூன்றில் ஒரு பங்கு பயன்படுத்தப்படும் என்றும் இந்த நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.