போலி பேஸ்புக் கணக்குகளை அகற்ற அதிரடி நடவடிக்கை

போலி பேஸ்புக் கணக்குகளை நீக்குவதற்கு பேஸ்புக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை கணினி அவசர பிரிவின் பிரதான தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ரொஷான் சந்திரகுப்தா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், முதல் 2 மாதங்களில் 529 பேஸ்புக் கணக்குகளை முடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.

​போலி கணக்குகளை ஆரம்பித்தல், பேஸ்புக் கணக்குகள் மூலம் நிதி மோசடியில் ஈடுபடுதல் உள்ளிட்ட குற்றச் செயல்களை அடிப்படையாகக் கொண்டே இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், இவ்வாறான முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றதை அடுத்து, கடந்த வருடத்தில் 3,600 பேஸ்புக் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.