போலி நாணயதாள்களுடன் இருவர் கைது

அம்பாறை – தமன பிரதேசத்தில் 5,000 ரூபாய் போலி நாணயதாள்களுடன் இருவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களிடம் இருந்து 14 போலி நாணயத்தாள்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மோட்டார் சைக்கிளில் பயணித்த சந்தேக நபர்களை சோதனைக்குட்படுத்திய போது, போலி நாணயத்தாள்களை கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. சந்தேக நபர்கள் நேற்று இரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

குறித்த சந்தேக நபர்கள் தமன பிரதேசத்தை சேர்ந்தவர்கள் என்றும், அவர்களிடம் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.