போலி தகவல்களை கொடுத்து விசா பெற முயன்றவர் கைது

போலி தகவல்களை

போலி தகவல்களை சமர்ப்பித்து வெளிநாடொன்றிற்கு வேலை வாய்ப்பிற்காக செல்ல முயற்சித்த யுவதி ஒருவர், நேற்று கைது செய்யப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது குறித்த யுவதி கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் வவுனியா பகுதியில் வசிப்பதோடு தன்னுடைய 15 ஆவது வயதில் போலி கடவுச் சீட்டினை சமர்ப்பித்து குவைத் நாட்டிற்கு தொழிலுக்கு சென்று வந்துள்ளார்.

ஒருவருடம் குவைத்தில் கடமையாற்றிவிட்டு நாட்டிற்கு திரும்பிய யுவதி மீண்டும் செல்ல முயற்சித்த வேளையிலேயே கைது செய்யப்பட்டுள்ளார்.

தாம் குவைத்துக்கு சென்று வருகை தந்ததின் பின்னர் திருமணம் முடித்து கொணடதாகவும் அதன் பின்னர் ஏற்பட்ட குடும்ப கஷ்டத்தினை போக்குவதற்காக மீண்டும் வெளிநாடு செல்ல முயற்சித்ததாகவும் காவல் துறையினரிடம் தெரிவித்துள்ளார்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]