போலி கடவுச்சீட்டுடன் ஈரான் பிரஜை கைது

போலி கடவுச்சீட்டை பயன்படுத்திய குற்றச்சாட்டில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

31 வயதுடைய ஈரான் நாட்டுப் பிரஜை ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
போலியான பிரேசில் நாட்டு கடவுச்சீட்டை பயன்படுத்தி இலங்கை ஊடாக

பிரித்தானியாவுக்கு பயணிக்க முற்பட்ட நிலையில் குறித்த நபர் கைதுசெய்யப்பட்டாக தெரிவிக்கப்படுகின்றது.

விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து, குறித்த நபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

இதனையடுத்து, கைது செய்யப்பட்ட ஈரான் பிரஜையிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக விமான நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]