போலி ஆவணங்களை பயன்படுத்தியவர் சிக்கினார்

போலி ஆவணங்களைப் பயன்படுத்தி வாகனங்கள் மற்றும் பணம் ஆகியனவற்றைப் பெற்று மோசடி செய்து வந்த நபரொருவரை வெலிமடைப் பொலிஸார் இன்று கைதுசெய்துள்ளனர்.

கடுவானை பிரதேசத்தைச் சேர்ந்த 36 வயது நிரம்பிய இந்நபர் போலி தேசிய அட்டையைப் பாவித்து 50 இலட்ச ரூபாவுக்கு மேற்பட்ட வகையில் காசோலைகளை மோசடி செய்துள்ளதாக இதுவரையில் 25 குற்றச்சாட்டுக்கள் கிடைக்கப்பெற்றுள்ளதுடன், அதுகுறிதது தற்போது விசாரணை செய்யப்பட்டு வருகின்றன.

அத்துடன் போலி ஆவணங்களைப் பயன்படுத்தி, வாகனங்கள் பலவற்றைப் பெற்று, இந்நபர் மோசடி செய்துள்ளார். அவ்வகையில் மோசடி செய்த ஏழு மில்லியன் ரூபா பெறுமதிமிக்க வாகனமொன்றையும், பொலிஸார் மீட்டுள்ளனர்.

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]