போர்த்துகல் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 700 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

போர்த்துகல் காட்டுத் தீயை கட்டுப்படுத்த 700 தீயணைப்பு வீரர்கள் போராட்டம்

போர்த்துகல் நாட்டின் சின்ட்ரா பகுதியில் பரவி வரும் காட்டுத் தீயை கட்டுப்படுத்த சுமார் 700 தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி வருகின்றனர்.

போர்ச்சுக்கல் – சின்ட்ரா மலைப்பகுதியில் நேற்று முன்தினம் இரவு திடீரென தீப்பிடித்தது.

இதனைதொடர்ந்து சின்ட்ரா-காஸ்காயிஸ் இயற்கை பூங்காவில் பிடித்த தீ, காற்றின் வேகம் காரணமாக அருகில் உள்ள பகுதிகளுக்கும் வேகமாக பரவியது.

இதனையடுத்து, குறித்த தீ சம்பவம் தொடர்பில் வனத்துறை மற்றும் தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்ட நிலையில், ஏராளமான தீயணைப்பு வாகனங்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்த வனத்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்பு படையினர தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டனர். எனினும் தீயினை கட்டுப்படுத்த முடியாது போனது.

பின்னர் காற்றின் வேகம் தணிந்த நிலையில், சுமார் 700 வீரர்கள் தீயணைக்கும் பணியில் ஈடுபட்டு ஹெலிகாப்டர்கள் மூலமாகவும் தண்ணீர் பீய்ச்சியடித்து தீ பரவாமல் தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.

எனவே முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மலையடிவாரங்களில் வசிக்கும் சுமார் 350 மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதோடு, இதேபோல் தீப்பிடித்த பகுதியில் மரங்கள் அடர்ந்த காட்டில் வசித்து வந்த 47 பேர் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.

போர்த்துகல் நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் கோடைக்காலத்தில் காட்டுத்தீ ஏற்பட்டு பெருமளவில் சேதம் ஏற்படுகிற நிலையில், கடந்த ஆண்டு ஏற்பட்ட காட்டுத்தீ விபத்தில் 106 பேர் உயிரிழந்ததும் குறிப்பிடத்தக்கது.

போர்த்துகல் காட்டுத் தீயை போர்த்துகல் காட்டுத் தீயை போர்த்துகல் காட்டுத் தீயை போர்த்துகல் காட்டுத் தீயை போர்த்துகல் காட்டுத் தீயை

Website – www.universaltamil.com

Facebook – www.facebook.com/universaltamil

Twitter – www.twitter.com/Universalthamil

Instagram – www.instagram.com/universaltamil

Contact us – [email protected]